ரெட் கிரேனைட் பிக்ட்சர்ஸ், 1எம்டிபி மீதான வழக்குகளை அமெரிக்க நீதித்துறை நிறுத்திவைக்க உத்தேசித்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மனு ஒன்றை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளது.
அந்நிறுவனத்தின் வழக்குரைஞர் பதிவுசெய்த மனு “வழக்கில் வெளிப்படும் தகவல்கள் நடப்பு விசாரணைகளைப் பாதிக்கலாம் என்று கூறும் அரசாங்கம் எப்படி பாதிக்கும் என்பதை எடுத்துரைக்கவில்லை” எனக் குறிப்பிடுகிறது.
“வழக்கில் எதிர்வாதி (ரெட் கிரேனைட்) தன்னை நிரபராதி என்பதை நிரூபிக்க மேலும் காத்திருக்க வைப்பது நல்லதல்ல. வழக்கு ஓராண்டுக்குமேலாக நிலுவையில் உள்ளது. பத்திரிகைத் தகவல்களின்படி அரசாங்கத்தின் விசாரணைகள் ஈராண்டுகளாக நடந்து வருகின்றன.
“(ரெட் கிரேனைட்டைப் பொறுத்தவரை) எதிர்வழக்காடவும் அதன் சொத்துகளைத் திரும்பப் பெற்று தடையில்லாமல் பயன்படுத்தவும் ஆர்வம் கொண்டிருக்கிறது.
“ஆனால், வெளிப்படும் தகவல்களால் ‘ விசாரணைகள் பாதிக்கப்படும்’ என்று கூறப்படுவதைப் பார்க்கையில் அரசாங்கம் வழக்கைக் காலவரையின்றி நிறுத்திவைக்க விரும்புவதுபோல் தெரிகிறது”, என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.