பேங்க் நெகாராவின் அப்போதைய கவர்னர் ஜப்பார் உசேன் அன்னிய செலாவணியில் ஏற்பட்ட இழப்பு குறித்துத் தெரிவிக்கப்பட்டபோது அதிர்ச்சி அடைந்தார் என அவரின் சிறப்பு உதவியாளர் கூறினார்.
அன்னிய செலாவணி இழப்பைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள அரச விசாரணை ஆணைய(ஆர்சிஐ)த்திடம் இன்று வாக்குமூலம் அளித்த லியு சியு குவான்,86, மத்திய வங்கியின் கணக்குகளை ஆராயும் பொறுப்பை ஜப்பார் தம்மிடம் ஒப்படைத்திருந்ததாகக் கூறினார்.
“கணக்குத்துறையில் விசாரித்தபோது அன்னிய செலாவணி பரிவர்த்தனையில் பெரிய இழப்புகள் ஏற்பட்டிருப்பதாக கணக்காளர் தெரிவித்தார்.
“நான் உடனடியாக கவர்னரிடம் இழப்பு குறித்துத் தெரிவித்தேன். அவரால் நம்ப முடியவில்லை. அவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்க முடியாது என்றார்”.
கணக்குகளை மீண்டும் ஒரு தடவை சரிப்பார்க்குமாறு லியுவிடம் கூறினார் ஜப்பார்.
மறுபடியும் கணக்குகளைச் சரிபார்த்த லியு, இழப்புகள் ஏற்பட்டிருப்பதை பேங்க் நெகாரா துணை கவர்னராக இருந்த லின் சீ யான்னிடம் தெரிவித்தார்.
“ரிம8பில்லியனிலிருந்து ரிம 9 பில்லியன்வரை இழப்பு ஏற்பட்டிருந்தது. பின்னர் லின்னும் நானும் ஜப்பாரிடம் சென்று அதை விளக்கினோம்”, என லியு குறிப்பிட்டார்.
ஜப்பார் அதைக் கேட்டு “கவலையும் அதிர்ச்சியும் அடைந்தார்” என்றார் லியு.
எங்களுக்கு இத்தகவல்கலெல்லாம் எதுவும் தெரியாது. அதனால் கவலையில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஆனால் இதையெல்லாம் தெரிந்து வைத்திருந்த தற்போதைய பிரதமரும் இதுவரை கவலையில்லாமல்தான் இருந்தாரோ?
நாடு எப்படி போனால் என்ன தம் பதவி மட்டும் வாய்த்தால் போதும் என்ற கவலையில் இது நாள் வரை வாழ்திருப்பாரோ?
யாம் அறியோம் பராபரமே.