1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி), அபு டாபியின் இண்டர்நேசனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி(ஐபிஐசி)க்கு கொடுக்க வேண்டிய முழுப் பணத்தையும் நாளை கொடுக்குமா என்பதை கருவூலத் தலைமைச் செயலாளரும் 1எம்டிபி வாரிய உறுப்பினருமான முகம்மட் இர்வான் செரிகார் அப்துல்லா உறுதிப்படுத்த மறுத்தார்.
புத்ரா ஜெயாவில் ஒரு நிகழ்வுக்கு வந்திருந்த இர்வான் “பொறுத்திருந்து பாருங்கள்”, என்று செய்தியாளர்களிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
முழுக்க முழுக்க நிதி அமைச்சுக்குச் சொந்தமான 1எம்டிபி, ஐபிஐசிக்குக் கொடுக்க வேண்டிய யுஎஸ்$602 மில்லியனை (ரிம2.57 பில்லியன்) ஜூலை 31ஆம் நாள் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கொடுக்கத் தவறிவிட்டது.
அதை அடுத்து ஐபிஐசி கூடுதல் அவகாசம் வழங்கியது. அதன்படி கொடுக்க வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை, யுஎஸ்$350 மில்லியனை, 1எம்டிபி ஆகஸ்டு 12-இல் கொடுத்தது. மீதித் தொகையை ஆகஸ்டு 31-இல் கொடுப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. 1எம்டிபிக்குக் கொடுக்கப்பட்ட கெடு நாளை முடிவுக்கு வருகிறது.
இவன் அதற்காக மதம் மாறியவனா? இவனைப்போன்ற ஈன சப்பிகள் எண்ணில் அடங்கா .