அரிசி இனாமாகக் கொடுப்பது கையூட்டு ஆகாது என்று மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) அதிகாரி ஒருவர் கூறியிருப்பதை மறுக்கிறார் பெர்சே தலைவர் மரியா சின்.
“அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அதுவும் வாக்குகளை விலைக்கு வாங்குவது போன்றதுதான்”. எம்ஏசிசி துணைத் தலைவர் அஸாம் பாக்கியின் கூற்று குறித்துக் கருத்துரைக்கும்படி கேட்டுக்கொண்டதற்கு மரியா இவ்வாறு கூறினார்.
அஸாம் நேற்று, ஏழைகளுக்கு அரிசி கொடுப்பது நன்கொடை அளிப்பது போன்ற “உண்மையான உதவிகள்” கையூட்டு அல்ல என்றும் அதேபோல் தேர்தல் வாக்குறுதிகளும் கையூட்டு அல்லவென்றும் தேர்தல் காலங்களில் அப்படி வாக்குறுதி அளிப்பது சகஜம்தான் என்றும் கூறியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
“வாக்குறுதிகளை(தேர்தல் காலத்தில்) நிறுத்த வேண்டும். (நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு) நீங்கள் அரசாங்கம் அல்ல. பிறகு எப்படி வாக்குறுதி அளிக்கிறார்கள்? அதையும் தேர்தல் பிரச்சாரங்களில் ஏன் செய்கிறீர்கள்”, என மரியா வினவினார்.
தேர்தல் காலத்தில்தான் சமுக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“தேர்தல் காலத்தில் அரசாங்கம் செயல்படாது. (அரசாங்க அலுவல்களை அப்போது) பராமரிப்பு அரசுதான் செய்ய வேண்டும். ஆனால், அப்படி ஒன்று நம்மிடம் இல்லை.
“நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள நமக்குப் பராமரிப்பு அரசாங்கம் ஒன்று தேவை”, என்றாரவர்.
(மற்ற) எல்லா நாடுகளிலும் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க மட்டுமே பிரதமர் அலோசனை கூறுவார். மற்றபடி தேர்தல் நடைபெறும் தேதி போன்ற விபரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே அதிகாரம்
நிச்சயமாக இது கையூட்டுதான். தேர்தல் காலங்களில் இதுபோன்ற சிறு மீன்களை வீசியெறிந்து, வெற்றிப்பெற்றபின் சுறாக்களை உண்டுக் கொழுக்கலாமே. தேர்தல் காலங்களில் மட்டும்தான் ஏழைகளுக்குப் பசியெடுக்கிறதென்று எப்படி இவர்கள் தெரிந்துகொண்டார்கள் ?
அது முதலாம் உலகம் –நாம் முதலாம் உலகமா?
மரியா அவர்கள் கூறுவதுதான் சரி தேர்தல் தேத்தி அறிவிக்கப்பட்ட பின்னர் எந்த உதவி பொருட்களும் வழங்கக்கூடாது அது எல்லா நாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது இங்கு மட்டும் தலைகீழாக நடக்கிறது.
சரியா சொன்னேங்க நம்மவன், நாடாளுமன்றத்தை கலாப்பது தான் பிரதமர் ஆனால் இங்கு பிரதமர் பேரரசரையும் மிஞ்சு விடடர் அதற்க்கு நிறைய கூஜா தூக்கிங்க்ல
இந்த மரியா சின்னை ஒரு முறை சிறையில் அடைத்தும் புத்தி வரவில்லை. அரசு செய்வது சரியில்லை என்கிறார். என்ன திமிர் பாருங்கள்.
பராமரிப்பு அரசாங்கம் இருந்தாலும் ! பினாமி அரசாங்கமாக தானே இருக்கும் ! அரிசி ! இலவசம் ! எல்லாம் லஞ்சம் கிடையாது ! நாம் நாட்டு மக்கள் பிச்சை எடுக்க தயாராக இருக்கும் போது ! அதிகாரத்தில் உள்ளவர்கள் பிச்சை இடுவதில் எந்த தவறும் கிடையாது !! பிரீம் தொகையும் பிச்சை தானே !! மக்கள் கை ஏந்தும் வரை ! அவர்கள் கையாடல் செய்து கொண்டுதான் இருப்பார்கள் !!