பள்ளிக்கூடங்களிலிருந்து சமயத்தை அகற்றி விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

“முதல் நாள் தொடக்கம் நமது பிள்ளைகள் சமயம் (அகாமா), தார்மீகம் எனப் பிரிக்கப்படுகின்றனர். அதனால் உண்மையான ஒருங்கிணைப்பு ஏதும் இல்லாமல் போய் விடுகிறது.”

கிறிஸ்துவ ஆசிரியர்களை தடை செய்ய வேண்டுமென தான் கோரியதாகக் கூறப்படுவதை பெர்க்காசா மறுக்கிறது

சீனா புக்கிட்: அந்த சுவரொட்டிகள் பெர்க்காசா ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் வைக்கப்பட்டிருந்தன. அதனைச் செய்தவர் தனிநபர் என்றால் பெர்க்காசா தலைவரான இப்ராஹிம் அலி அதனைத் தடுத்திருக்கலாமே?

உண்மை 1: அவர் அதனைச் செய்யவில்லை

உண்மை2: அந்தச் செயலை அவர் உடனடியாகக் கண்டிக்கவில்லை.

அரசாங்கப் பள்ளிகளிலிருந்து கிறிஸ்துவ ஆசிரியர்கள் விலக்கப்பட வேண்டும் என்பதை அவர் ஆதரிக்கிறார் என்பதையே அது தெளிவாகக் காட்டுகிறது.

மிஷன் பள்ளிகளும் தாய்மொழிப் பள்ளிகளும் அவ்வாறு செய்ய முடியுமா- அதாவது அந்தப் பள்ளிக்கூடங்களிலிருந்து மலாய் ஆசிரியர்களை தடை செய்ய முடியுமா? தயவு செய்து உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்துங்கள். இது போன்ற கோரிக்கைகள் எல்லாம் முழுக்க முழுக்க அபத்தமானவை.

அடையாளம் இல்லாதவன்_3hdchd: பள்ளிக்கூடங்களிலிருந்து சமயத்தை அகற்றி விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? முதல் நாள் தொடக்கம் நமது பிள்ளைகள் சமயம் (அகாமா), தார்மீகம் எனப் பிரிக்கப்படுகின்றனர். அதனால் உண்மையான ஒருங்கிணைப்பு ஏதும் இல்லாமல் போய் விடுகிறது.

உஸ்தாஜ் அல்லது எந்த சமயத்தையும் சார்ந்த குருமார்கள் நம் பிள்ளைகளிடையே தங்களது அறியாமையையும் வெறியையும் பரப்புவதற்கு அனுமதித்தால், விளைவுகள் பேரழிவாக இருக்கும்.

பால் வாரென்: நமது தேசியப் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கிற ஆசிரியர்களுடைய செல்வாக்கிற்கு என் பிள்ளைகள் இரையாவதைக் காண நான் விரும்பவில்லை. அதனால் நான் அவர்களை வேறு இடங்களுக்கு அனுப்ப முடிவு செய்தேன்.

என் மூத்த புதல்வி தொடக்கப் பள்ளியில் இரண்டாம் ஆண்டின் முதல் தவணையை முடித்த வேளையில் நான் அவளை அங்கிருந்து அகற்றினேன். தான் மலாய்க்காரர் அல்லாதார் என்பதும் முஸ்லிம் அல்லாதார் என்பது அவளுக்கு அப்போதே தெரியும். அதனால் வேறு விதமாக தான் கவனிக்கப்படுவதும் அவளுக்குத் தெரியும். நான் அதனை ஒப்புக் கொள்ளவில்லை.

அடையாளம் இல்லாதவன்_3e06: துணை அமைச்சருடைய பதில் திருப்தி அளிக்கவில்லை. உண்மையக் கண்டு பிடிக்க அவர் அந்த நாளேட்டை விசாரிக்க வேண்டும். அந்தப் பதாதை வைக்கப்பட்டிருந்த பெர்க்காசா பேரணி குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்.

டேவிட் தாஸ்: “ஆசியர்கள் செய்யக் கூடிய சாத்தியமான தவறுகள் மீதான கவலையைப் புரிந்து கொண்டதாக கூறிய கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங், உணர்வுகளைத் தூண்டக் கூடிய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு ஆசிரியர்கள் போன்ற அரசு ஊழியர்களை கட்டுப்படுத்துவதற்கு வழிமுறைகள் இருப்பதாக விளக்கினார். அத்துடன் அத்தகைய குற்றங்களை செய்வதாக கண்டு பிடிக்கப்படுவோரைத் தண்டிக்க அந்த வழிமுறைகள் பயன்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.”

அது அமைச்சரது அறிக்கையின் ஒரு பகுதி. இது போன்ற அறிக்கைகளை வெளியிடுவதின் மூலம் அமைச்சர் ஏன் இத்தகைய போலியான குற்றச்சாட்டுக்களுக்கு அங்கீகாரம் கொடுக்கிறார்?

மலேசியக் கிறிஸ்துவர்களும் மற்றவர்களைப் போன்று இந்த நாட்டின் குடிமக்களே. கிறிஸ்துவர்களாக இருப்பது, எதற்கும் அவர்கள் தகுதி பெறுவதற்கு தடையாக இருக்கக் கூடாது.

ஹாஜி காம்தானி: தேவையற்ற பிரச்னைகளை கிளப்புவதின் வழி மலாய் இனத்திற்கு அவ்வப்போது அவமரியாதையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இப்ராஹிம் அலி போன்றவர்கள் நம்மிடையே இருப்பதால் நான் மலாய்க்காரன் என என்னை அழைத்துக் கொள்வதற்கே வெட்கப்படுகிறேன்.

மலாய்க்காரர்கள் நல்ல பண்புகளைக் கொண்டவர்கள். ஆனால் அந்த எம்பி அவற்றை எல்லாம் கெடுத்து விடுவதாகத் தெரிகிறது.

ஸ்விபெண்டர்: மலாய்க்காரர் அல்லாத பெற்றோர்கள் ஏன் தாய்மொழிப் பள்ளிகளை முதல் தேர்வாக கொண்டுள்ளதற்குக் காரணம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். தாய்மொழிப் பள்ளிகள் பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றன. இனம், சமயம் அடிப்படையில் பாகுபாடு காட்டுமாறு அவை போதிப்பதில்லை.

பெர்ட் தான்: பொதுத் தேர்தல் நெருங்கி வருவதையே அது உறுதிப்படுத்துகிறது. பெர்க்கசா/இப்ராஹிம் அலி அதன் கண்ணுக்குத் தெரியாத தோழர் அம்னோ ஆகியவை அச்சத்தில் மூழ்கியுள்ளன.

தேர்தலில் வெற்றி பெற பெர்க்காசா/அம்னோவுக்கு இன்னும் மலாய்க்காரர் அல்லாத, முஸ்லிம் அல்லாதாரின் ஆதரவு தேவை. சீனர்களையும் இந்தியர்களையும் அவர்கள் அச்சுறுத்தி விரட்ட  முடியாது.  சில மாதங்களுக்கு முன்பு மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கும் முஸ்லிம் அல்லாதாவர்களுக்கும் எதிராக பெர்க்காசா விடுத்த அறிக்கைகள் முக்கிய நாளேடுகளில் வந்து கொண்டிருந்தன. வெறுப்பை உமிழ்வதற்கு அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களும் நிகழ்ந்தன.

ஆனால் அண்மைய காலமாக அதன் தலைவர் இப்ராஹிம் அலி ( வேகத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு அம்னோ உத்தரவிட்டிருக்க வேண்டும்) தமது வலச்சாரித் தீவிரவாத நடவடிக்கைகளை மறுத்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த அறிக்கை வழி பெர்க்காசா அம்னோவைக் காட்டிலும் நல்லவராக தோற்றமளிக்கிறது. இப்ராஹிம் அலி தமது தோற்றத்தைச் சரி செய்ய முயலுகிறார்-அதாவது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “அமைதியாக” இருப்பதாகக் காட்டுவதற்கு முயற்சி செய்வதைப் போல..

TAGS: