மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொடுங்கள், ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை நிறுத்துகிறேன், நஜிப் பெண்களிடம் கேட்கிறார்

 

Najibtwothirdmajorityஒருதலைப்பட்ச சிறார் மத மாற்றத்தை முடிவுக்கு கொண்டுவர திருமணம் மற்றும் மண விலக்கு சட்டத்திற்கு (எல்ஆர்எ) முன்மொழியப்பட்ட திருத்தம் செக்சன் 88A நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை பெண்கள் விரும்பினால், பிஎன்னுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொடுக்குமாறு அவர்களை பிரதமர் நஜிப் ரசாக் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

ஒரு தலைப்பட்ச சிறார் மத மாற்றத்தை செக்சன் 88A முடிவிற்கு கொண்டுவந்திருக்கும். ஆனால், அத்திருத்தம் கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மீட்டுகொள்ளப்பட்டது.

“நான் பலவற்றைச் செய்ய விரும்புகிறேன், 88A மற்றும் அதெல்லாம், ஆனால் அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு நமக்கு ஒரு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகிறது (நாடாளுமன்றத்தில்)…ஆனால் அது நம்மிடம் இல்லை.

“நாம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது ஒன்று, நாம் என்ன செய்ய முடியும் என்பது வேறு.

“ஆனால், பெண்கள் நமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொடுத்தால் (அடுத்த பொதுத் தேர்தலில்), அது வேற கதை”, என்று கோலாலம்பூரில் சுமார் 1,000 பெண்கள் பங்கேற்ற டிஎன்50 (தேசிய உருமாற்றம் 2050) கலந்துரையாடலில் நஜிப் கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ஒருவர் ஒருதலைப்பட்ச சிறார் மத மாற்றத்தை முடிவுக்கு கொண்டுவர முன்மொழியப்பட்ட செக்சன் 88A -யை சட்டமாக்கும்படி வலியுறுத்தினார். அதற்கு மறுமொழியாக நஜிப் இவ்வாறு கூறினார்.

தற்போதைய நாடாளுமன்ற மக்களவையின் 222 இருக்கைகளில், 134 இருக்கைகள்தான் பின் வசம் இருக்கின்றன. மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு    இன்னும் 14 இருக்கைகள் தேவைப்படுகின்றன.