எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் தோற்கலாம் என்பதை ஒப்புக்கொண்டதற்காக தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக்-க்குக்கு டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் நன்றி தெரிவித்தார்.
“14வது பொதுத் தேர்தலில் அம்னோ/பிஎன் தோல்விகண்டு பக்கத்தான் ஹரபான் அரசாங்கம் அமைக்கும் சாத்தியமிருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதற்காக சாலே-க்கு நன்றி நவில்கிறேன்”,என லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அம்னோ இப்போது பெரும்பாலான மலாய்க்காரர்களின் ஆதரவை இழந்து விட்டது.
அம்னோவுக்கு 1.6 மில்லியன் அரசு ஊழியர்களின் ஆதரவும் குறைந்து கொண்டே வருகிறது.
என்ன செய்தால் பக்கத்தான் ஹரபான் 14வது பொதுத் தேர்தலில் வெற்றிபெறலாம் என்று டிஏபி செய்துள்ள கணிப்புடன் சாலே உடன்படுகிறார் என்றே தோன்றுகிறது.
“டிஏபி தலைவர்கள் கூறுவதுபோல் மலாய் வாக்குகளில் 10-இலிருந்து 15விழுக்காடுவரை இடம் மாறுவது அவர்கள்(ஹரபான்) புத்ரா ஜெயாவை வெற்றிகொள்ள வழிகோலும்”, என சாலே நேற்று கூறியிருந்தார்.
எனவே, டிஏபி நாட்டை ஆள்வதை விரும்பாவிட்டால் இவ்விசயத்தில் மலாய் வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சாலே கேட்டுக்கொண்டார்.
டிஏபி, மலாய்க்காரர்களுக்கு எதிரி, இஸ்லாத்துக்கு எதிரி என்று கூறப்படுவதை மறுதலித்த லிம், பாஸ் கட்சியின் முன்னாள் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட், அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள் பாட்சில் நூர், யூசுப் ராவா போன்றோர் டிஏபியுடன் நட்பு பாராட்டி வந்ததே அதற்குத் தக்கச் சான்று என்றார்.
“அக்குற்றச்சாட்டுகள் யாவும் அப்பட்டமான பொய்கள், வீண் பழிப்புரைகள்”, என்றாரவர்.
ஒப்புக்கொண்டு ஆகப்போவது ஒன்றுமில்லை- தேர்தலில் வெற்றி பெற வேண்டும்– அநியாயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நம்பிக்கை நாயகன் அவனின் சப்பிக்கு ஓய்வுக்காக அள்ளி கொடுத்திருக்கிறான். இவ்வுலகம் சப்பிகளுக்கும் நக்கிகளுக்கும் தான் போல் இருக்கிறது. உண்மைக்கு காலம் இல்லை.