துணை அமைச்சர் எம். சரவணனுடன் தொடர்புடைய ஒரு கூட்டத்தினர் ஒரு நாளிதழின் உரிமையாளர் மற்றும் அதன் தலைமை ஆசிரியர் ஆகியோரைத் தாக்கியதாக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அந்த மஇகா தலைவர் அவ்வாறான சம்பவம் நடந்தது என்பதை மறுத்துள்ளார்.
“நான் ஒட்டுமொத்தமாக அதை மறுக்கிறேன், அவ்வாறான சம்பவம் நடக்கவில்லை.
“கடந்த இரண்டு நாள்களில், தமிழ் மலர் கூட்டரசுப் பிரதேச மஇகாவைப் பற்றி போலியான செய்திகளை வெளியிட்டுள்ளது. இன்று, சில மஇகா இளைஞர்கள் அந்தப் பிரச்சனை பற்றி விளக்கம் பெற விரும்பினர் (அந்த நாளிதழிடம்).
“அவர்கள் தெருவில் வாதிட்டுக் கொண்டனர்., அவர்கள் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டனர் ஆனால் அது ஒரு கடுமையான தாக்குதல் அல்ல”, என்று சரவனன் மலேசியாகினியிட்ம் கூறினார்.
கூட்டரசுப் பிரதேச மஇகா தலைவரான சரவணன், இக்கைகலப்பு பற்றி தெரிந்து கொண்டவுடன், சம்பவம் நடந்த இடத்திற்கு இன்று காலையில் வந்ததாகவும், அங்கிருந்த “அனைவரையும் வீட்டுக்குப் போகும்படி” கூறியதாவும் தெரிவித்தார்.
இரு தரப்பினரும் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதை மலேசியாகினி அறிந்துள்ளது.
செய்தியாளர் சி. கிரிஸ்ட், கோலாலம்பூரில் தமிழ் மலர் அலுவலகத்தில் அவரைச் சந்தித்த போது, அந்த நாளிதழின் உரிமையாளர் ஓம்ஸ் தியாகராஜன் மற்றும் தலைமை ஆசிரியர் கே. சரஸ்வதி ஆகியோர் தாக்கப்பட்டதை அவர் கண்டதாகக் கூறிக்கொண்டார்.
“எனது முதலாளி (ஓம்ஸ்) சரவனனுடன் வாதிட்டுக்கொண்டிருக்கையில் நான் அவரை நோக்கிச் சென்றேன். அப்போது சரவணின் கூட்டத்தைச் சேர்ந்த ‘மஇகா பணிப்படை’ என்ற வாசகத்தைக் கொண்ட டி-சட்டை அனிந்திருந்த ஒருவர், எனது முதலாளியைக் குத்தினார்.
“அங்கு ஒரு சண்டை நடந்தது மற்றும் அவர்கள் எனது முதலாளியின் சட்டையைக் கிழித்தனர்.
“மற்றும் அவர்கள் எனது தலைமை ஆசிரியரின் (சரஸ்வதி) போனைப் பிடுங்கினர் ஏனென்றால் அவர் படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
“எங்களுடைய புகைப்படக்காரர்களில் ஒருவர், பெயர் ஷான். அறையப்பட்டார். அவர்கள் அவருடைய கேமராவையும் பிடுங்கிக் கொண்டனர்.
“நடந்த சம்பவங்கள் அனைத்தும் சுமார் 30 நிமிடங்களுக்கு நடந்தன”, என்று மலேசியாகினிக்கு தெரிவித்தார். மேலும் 70 லிருந்து 80 வரையிலான இளைஞர்கள் அதில் சம்பந்தப்பட்டிருந்தனர்.
டாங் வாங்கி போலீஸ் அதிகாரி சுக்கிரி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளதை உறுதிப்படுத்தினார். இப்போது வாக்குமூலங்கள் எடுப்பதில் ஈடுபட்டிருப்பாதகவும் அவர் கூறினார்.
டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று வெளியிட்ட அறிக்கையில் போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவர் போலீஸ் தலைமையகத்தில் சரஸ்வதியையும் சந்தித்தார்.
தமிழ் மலர் அலுவகத்தில் நடை பெற்றசம்பவம் தலை குனிவை ஏற்படுத்துகிறது . பத்திரிக்கையில் வந்த செய்தி தவறு என்றால் அது குறித்து விளக்க வேண்டும் . சம்பந்தப்பட்ட பத்திரிக்கை நிர்வாகத்திடம் பேச வேண்டும் . அதை விடுத்து இப்படி நடப்பது சரியல்ல என்பதை உணர வேண்டும் .
இந்நாட்டில் தமிழ் பத்திரிகையாளரை தாக்கப்பட்டுளார், தமிழ் நாளிதழ் அலுவலகம் மற்றும் அந்நாளிதழின் உரிமையாளர் தாக்கப்படுகிறார், தகர தமிழ் நாட்டு தரங்கெட்ட தமிழனைவிட கேவலமான ஈன பிறவிகள் இந்த மஇகா-வினர்.
இந்நாட்டில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் முதல் எதிரி மஇகா-தான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே !
மாற்றான் வீட்டுத் தோட்டத்தில் ஒரு திருடன் நட்ட விதை, இன்று அவனைப் போலவே செழித்து, வளர்ந்து அராஜகம் புரிகின்றது !
தைரியம் இருந்தால் அனைவரும் ஒன்று கூடி சரவணன் அலுவலகத்திலும் போராடுவோம் . அவன் எத்தனை குண்டர் கும்பல்கள் ஈன ஜாதிகள் காப்பாற்றும் என்று பார்ப்போம். வாங்க
ஐயா loganathan
இன்னும் உலகத்தை புரிஞ்சிக்காத பிள்ளையாய் இருக்கீங்களே.
இதே தமிழ்நாட்டில் நடந்திருந்தால், தகர தமிழ் நாடு அங்கே வாழுபவன் தரங்கெட்ட தமிழன், தமிழில் எவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகள் உண்டோ அனைத்தையும் உபயோகித்து மற்றொரு நாட்டில் வாழுபவனை அர்ச்சனை செய்வதில்தான் இங்குள்ள தமிழ் பற்றாளர்களுக்கு ஆர்வம் அதிகமே தவிர, நம் நாட்டில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களுக்கு குரல் கொடுக்க வர மாட்டார்கள்.
நீங்கவேற “தைரியம் இருந்தால் அனைவரும் ஒன்று கூடி” என நக்கல் பண்ணுவது ஓவரா தெரியலையா ?
சென்ற13வதுதேர்தலில் தாப்பாவில்
எதிர்கட்சிவேட்பாளராகபோட்டியிட்ட
வசந்தகுமாரின்வெற்றிக்கு வேலைசெய்த
வரின் இறப்புக்கு காரணமானவர்களை
ஒன்னும் புடுங்க முடியல,ஒம்ஸ் தியாகராஜன்
மக்கள் ஓசைக்குமுன்அறிப்பில்லாமல்
ஆள்களைஅனுப்பிபரிண்டிங் மிசினை
கழட்டியவர்,அதே மக்கள் ஓசை ஓம்ஸ்
தியாகராஜனை தோலில் தூக்கிவைத்து
பகழாரம் சூட்டியது, எல்லாம்பணம் படுத்தும்
பாடு!