மஇகா இளைஞர் பிரிவு உறுப்பினர்களால் தமிழ் மலர் நாளிதழின் உரிமையாளர் மற்றும் அதன் தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை ஊடக அமைப்புகள் கண்டித்துள்ளன.
கிராக்கான் மீடியா மெர்டேகா (கெராம்)-வும் மலேசிய செய்தியாளர் கழக (ஐஓஜே)மும் உடல்ரீதியான தாக்குதல்களுக்கு இடமளிக்கக் கூடாது என்று கூறின.
“அதிருப்தி இருந்தால் அதை முறையான வழிகளில், சட்ட ரீதியான வழிகளில்தான் வெளிப்படுத்த வேண்டும்”, என கெராம் ஓர் அறிக்கையில் கூறியது.
“ஒரு ஜனநாயக நாட்டில் தடையின்றியும், எத்தரப்புக்கும் அஞ்சாமலும் கடமைகளை நிறைவேற்றும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
“அரசியல் கட்சிகள் ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுப்பதை ஒருபோதும் ஏற்பதற்கில்லை”, என்றது கூறிற்று.
நேற்று, மஇகா இளைஞர் பிரிவினர் “எதிரணிக்கு ஆதரவாக” செயல்படும் தமிழ் மலருக்குக் நாளிதழுக்குக் கண்டனம் தெரிவிப்பதற்காக அதன் அலுவலகத்துக்குமுன் திரண்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட அமளியில் தமிழ் மலர் உரிமையாளர் ஓம்ஸ் தியாகராஜனும் அதன் தலைமை ஆசிரியர் சரஸ்வதி கந்தசாமியும் தாக்கப்பட்டுக் காயமடைந்ததாக செய்தியாளர் சி.கிறிஸ்ட் தெரிவித்தார்.
ஆனால், சம்பவத்தின்போது அங்கிருந்த இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் எம்.சரவணன் அப்படி எதுவும் நிகழவில்லை என மறுக்கிறார்.
ஊடகங்கள் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரிகள் அல்ல, ஊடகங்கள் யாருக்கு துணை போக மாட்டா, அவற்றை விலைக்கு வாங்கவும் முடியாது என கெராம் கூறியது.
இத்தகைய தாக்குதல்கள் தொடர்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் சம்பந்தப்பட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.
2013 ம் ஆண்டு மலேசிய நண்பன் அலுவலகம் தாக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸ் புகாரும் செய்யப்பட்டது. ஆனால் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படியென்றால், அந்த குண்டர் குமபல் தாக்குதலில் போலீசாருக்கும் சம்பந்தம் உண்டா? அதேபோன்றுதான் இந்த தாக்குதல் சம்பவத்திலும் போலீசார் மீது சந்தேகம் வலுக்கிறது. வேலியே பயிரை மேய்கிறது.
குண்டர்களை வளர்த்து மந்திரி சபையிலும் செனட் சபையிலும் இடம் வாங்கிக் கொடுக்கும் கட்சி உருப்படாது.
ம இககுண்டர் கலாச்சாரத்துகு தலைவர்
இல்லாதகுறை தீர்கப்பட்டுள்ளது!
எதிர்கட்சிகளோ அல்லது மக்கள் நலன் விரும்பிகளோ, சாலையிலோ அல்லது பிரச்சினைகள் உட்பட்ட இடங்களிலோ ஏதாவது கூட்டமோ ஆர்பாட்டமோ நடத்துவார்களேயானால், இரண்டு நாட்களுக்கு முன்னமேயே அவ்விடங்களுக்கு போலீசார் சென்று குவிந்து விடுவர். 80 பேர் கொண்ட ஒரு கூட்டம் ஒரு கட்டிடத்தின் முன் அராஜகமான முறையில் நடந்து கொள்ள முனைந்துள்ளார். இந்த போலீஸ் ‘படையினர்’ எங்கே போயிருந்தனர்? ‘ஹாஜி’ யாத்திரைக்கு மெக்காவுக்கு சென்றிருந்தவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லையா?
தாப்பா நாடாளுமன்றத் தொகுதி, உள்புற தொகுதி (Kawasan pendalaman) குறிப்பாக, தாப்பாவிலிருந்து கேமரன் மலை செல்லவேண்டுமெனில், குறைந்தது 50 கிலோமீட்டர் வரை சென்று ரிங்லட் என்ற பட்டணத்தை அடையும்வரை, அந்த area தாப்பா வை சேர்ந்த தொகுதிக்கு உட்பட்டது. இந்த சாலை படுமோசான சாலை. குண்டும் குழிகளும் ஆயிரக்கணக்கில் உள்ளன. பல வருடங்களாக சீர்படுத்தப் படாத சாலை. இந்த சாலையில் நின்றுக் கொண்டு பொதுப்பணி துறைக்கு எதிராக, தம்பி சரவணன் ஆர்ப்பாட்டம் செய்திருப்பாரேயானால், தமிழர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மலேசியர்களும் பாராட்டியிருப்பர். இதையெல்லாம் விட்டுவிட்டு, CCTV க்கு தனது சொட்டைத் தலையை படம் போட்டு காட்டி பெயரை கெடுத்துக் கொண்டாரே! சிவ சிவா !