பிஆர்எம்-முக்குப் பரந்த நோக்கம் வேண்டும்

“பிஆர்எம் உறுப்பினர்களுக்கு பேரம்பேசுதல் என்பதற்குப் பொருள் தெரியவில்லை. ஒன்றைப் பெறப் பேரம் பேச  விரும்பினால் அவர்கள் ஒன்றைக் கொடுப்பதற்கும் சித்தமாக இருக்க வேண்டும்.”

பக்காத்தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிஆர்எம் போட்டியிடுவது உறுதி

ஒங்: 2008 பொதுத் தேர்தலில் செலாயாங்கில் பிஎன், பிகேஆர், பிஆர்எம் ஆகிய மூன்று கட்சிகளுமே போட்டியில் குதித்தன. அந்த மும்முனைப் போட்டியில் பிஆர்எம் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவர் கோ சூ யோங்.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் கோ சூ யோங்குக்குக் கிடைத்தவை 1,332 வாக்குகள்-அதாவது 2.2%. 

அற்பமாக 2.2% வாக்குகளைப் பெற்ற கோ, அத்தொகுதியில் வெற்றிபெற்ற கட்சியுடன் பேரம் பேச முயல்கிறாரா?

பேரம்பேசுதல் என்பதற்கே அர்த்தம் தெரியாதிருக்கிறது பிஆர்எம். ஒன்றைப் பெறப் பேரம் பேச  விரும்பினால் அவர்கள் ஒன்றைக் கொடுப்பதற்கும் சித்தமாக இருக்க வேண்டும்.

60,673 வாக்குகளில் வெறும் 1,332 வாக்குகளை வைத்துக்கொண்டு பேரம்பேச முடியாதய்யா.

2004 தேர்தலில் செலாயாங்கில் சான் கொங் சோய்க்கு(பிஎன்) 36,343 வாக்குகளும் கோ சுவி யோங்குக்கு(பிகேஆர்) 13,117 வாக்குகளும் கிடைத்தன.

2008 பொதுத் தேர்தலில் கோ சுவி யோங் (இவரும் பிஎம்ஆர் தலைவர் ரொஹான்னா அரிப்பின் குறிப்பிடும் கோ சூ யோங்கும் ஒருவரே) பிகேஆரைவிட்டு விலகி அதே தொகுதியில் பிஆர்எம் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது அவருக்கு 1,332 வாக்குகள் கிடைத்தன. அவரே 2004-இல் பிகேஆர் வேட்பாளராக போட்டியிட்டபோது 13,117 வாக்குகள் கிடைத்தன.

இப்போது பிகேஆர் அத்தொகுதியை பிகேஆர் கோ-விடம் ஒப்படைக்க வேண்டும் என்று ரொஹான்னா கேட்கிறார்.

ஹிடுப் ரக்யாட்:  பக்காத்தான் வென்ற தொகுதிகளைக் கேட்காமல் அது எந்தெந்தத் தொகுதிகளில் தோற்றதோ அவற்றைக் கேளுங்கள்.

அவற்றில் போட்டியிட்டு வெல்வதுதானே பெருமையாக இருக்கும்.

அப்படியிருக்க, மாற்றரசுக் கட்சிகளிடமுள்ள தொகுதிகளில்தான் போட்டியிடுவேன் என்று பிஆர்எம் மருட்டுவது ஏன்?

ஈப்போ2: நாடாளுமன்றத் தொகுதிகள் 222. சட்டமன்றத் தொகுதிகள் 500. எல்லாத் தொகுதிகளிலும் பக்காத்தான் ரக்யாட் போட்டியிட வேண்டும் என்றால் மாற்றரசுக் கட்சிக்கு ஆதரவாக உள்ள மற்ற கட்சிகளின் நிலை என்ன?

பக்காத்தான் ரக்யாட்டில் இடம்பெறவில்லை என்பதால் அவர்களுக்குத் தேர்தலில் போட்டியிடும் உரிமை இல்லை என்பதோ அவர்களை வீண் தொல்லைகள் என்று முத்திரை குத்துவதோ சரியல்ல.பக்காத்தான், பிஎன்னை எதிர்த்து நாட்டில் அரசியல் மாற்றத்தை உண்டுபண்ண விரும்பும் கட்சிகளை மதிக்க வேண்டும்.

வரப்போகும் தேர்தலில் பக்காத்தான், பிஎன்னை எதிர்ப்பதில் சிரமங்களை எதிர்நோக்கும். பக்காத்தானில்  இடம்பெற்றிராத சிறிய கட்சிகளைக் கொசுக்கட்சிகள் என அது மட்டம் தட்டக்கூடாது.

தெமங்கோங்: பக்காத்தான் மற்ற கட்சிகளுக்கு இடம் அளிக்காமல் தன்னை மட்டுமே மாற்றரசுக் கட்சியாக எண்ணிக்கொண்டிருக்கிறது. இதனால் வாக்குகள் சிதறும். பக்காத்தான் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்-விட்டுக் கொடுங்கள், இல்லையேல் தனித்து விடப்படுவீர்கள்.

ஜிம்மி இங்: நாட்டின் எதிர்காலத்தை முன்னிட்டு பிஆர்எம் தலைமைத்துவம் குறுகிய தன்னலத்தைக் கைவிட்டு பரந்த நோக்குடன் நடந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.

கேஜென்: இந்தக் கொசுக் கட்சிகள் பக்காத்தானை எதிர்த்துப் போட்டியிடட்டுமே. அதிகம் போனால் சில நூறு வாக்குகளைப் பெறுவார்கள். எப்படியும் வைப்புத்தொகையை இழப்பது உறுதி. பக்காத்தான் இவை பற்றிக் கவலைகொள்ள வேண்டியதில்லை.

எச்ஆர்பி (மனித உரிமைக் கட்சி)-க்கும் இதே ஆலோசனையைத்தான் கூறுவேன் -மும்முனைப் போட்டியை உருவாக்கப் போவதாக மருட்ட வேண்டாம்.

முகம்மட்: ஒரு பெரிய மாற்றரசுக் கூட்டணியில் இணைந்து அதன் ஒரு பகுதியாவதில் பிஆர்எம்முக்கு என்ன பிரச்னை? ஒரு பெரிய எதிரியான பிஎன்னைத் தனியே எதிர்த்துநின்று தோற்றுபோவதைவிட கூட்டணியில் இணைந்து எதிர்ப்பது மேல் அல்லவா?

TAGS: