ஜிஎஸ்டி வரி அகற்றப்பட்டால், அதன் இடத்தில் மீண்டும் விற்பனை வரி விதிக்கப்பட வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் அவைத் தலைவர் மகாதிர் கூறுகிறார்.
ஜிஎஸ்டியை அகற்றி விட்டால் அரசாங்கத்தின் வருமானம் குறையும். அதனால் அரசாங்க நிதிகள் மீது ஏற்படும் தாக்கத்தை கூடிய வரை குறைப்பதற்கு இது அவசியமாகிறது என்று அவர் செய்தித்தளம் த மலேசியன் இன்சைட்டிடம் இன்று காலையில் கூறினார்.
“அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் கட்டம் கட்டமாகச் செய்யப்பட வேண்டும். ஜிஎஸ்டியை திடீரென்று அகற்றி விட்டால், வருமானத்திற்கான வழி இல்லாமல் போய்விடும். அது அரசாங்கத்திற்கு நல்லதல்ல என்று அவர் மேலும் கூறினார்.
அடுத்தப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜிஎஸ்டி அகற்றப்படும் என்று பக்கத்தான் ஹரப்பான் அளித்துள்ள உறுதிமொழி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மகாதிர் இவ்வாறு பதில் அளித்தார்.
6% விற்பனை வரியை அகற்றிவிட்டதாக பொய் சொல்லி ஜி.எஸ்.டி 6% உடன் அந்த விறபனை வரி 6% டையும் சேர்த்து மக்களிடமிருந்து 13% வரியைப் ‘புடுங்கு’ வதை விட நேர்மையான முறையில் 6% அல்லது 7% விற்பனை வரியை வசூலிப்பது எல்லா நாடுகளிலும் உள்ளது தான். அது நேர்மையாகவும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும்.
அண்டை நாடுதனில் உள்ளதுபோல் இலஞ்சத்தை (முடிந்தவரை) துடைத்தொழியுங்கள். மாயமாய் மறையும் “பில்லியன்”களை கண்டுபிடியுங்கள் ! கள்ளத்தனமாக அந்நிய வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப்பணத்தை கொண்டுவர ஆவன செய்யுங்கள் ! மந்திரிமுதல், அரசுத்துறைகளில் பணிபுரியும் மேல்மட்ட அதிகாரியிலிருந்து கீழ்தட்டு ஊழியர்வரை தேவையற்றவர்களை களையெடுங்கள் ! வீண் விரயத்தை நிறுத்துங்கள் ! “கோட்டா” முறையை அகற்றி திறனுக்கு முன்னுரிமை கொடுங்கள் ! நாடு வளம்பெறும், மக்கள் நலம்பெறுவர். எந்த “Tax”சும் தேவையில்லை.