1980, 90-களில் பேங்க் நெகராவுக்கு ஏற்பட்ட வெளிநாணயச் செலாவணி இழப்பு குறித்து விசாரணை செய்யும் அரச ஆணையத்தில் (ஆர்சிஐ) பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கும் விசாரணைக்குத் தலைமையேற்றிருக்கும் முகம்மட் சிடிக் ஹசானுக்குமிடையில் கடும் வாக்குவாதம் மூண்டது.
மத்திய வங்கிக்கு ஏற்பட்ட உண்மையான இழப்புகளை அறிந்திருந்தும் அன்வார் அதை அமைச்சரவையிடம் தெரிவிக்கவில்லை என சிடிக் கூறினார்.
தெரிவித்து விட்டதாக அன்வார் பதிலளித்தார்.
அதற்கு சிடிக், ரிம5.7பில்லியன் இழப்பு பற்றி மட்டுமே தெரிவிக்கப்பட்டதாகவும் உண்மை நிலவரம் அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் உறுதியாகக் கூறினார்.
இழப்புகள் குறித்து அப்போதைய தலைமைக் கணக்காய்வாளர் இஷாக் தடின் எழுதிய கடிதத்தைக் குறிப்பிட்ட சிடிக், “இழப்பு எவ்வளவு என்பது 1992-இல் உங்களுக்குத் தெரியும் ஆனால், அமைச்சரவைக்கு கடிதம் பற்றித் தெரியாது” என்றார்.
“உங்களுக்குத் தெரியும். ஆனால், அமைச்சரவைக்கு நீங்கள் அதைத் தெரிவிக்கவில்லை”, என சிடிக் கூறினார்.
அன்றைய பிரதமர் மகாதீர் ஆட்சியில்
FOREX EXCHANGE – BUSINESS – நஷ்டம்
இன்றைய பிரதமர் நஜிப் ஆட்சியில்
1MDB – ILLEGAL MONEY LAUNDERING – திருட்டு
நாடு பணம் நஷ்டம் அடைந்ததை விட,
நாட்டின் பணத்தை திருடுவதே மேல்
என்று ஆர்சிஐ விசாரணை குழு கூறினாலும் ஆச்சர்யம் இல்லை.