பிரதமர் நஜிப் அமெரிக்காவுக்குச் செல்லும் போது மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைவர் சுல்கிப்ளி அஹமட்டும் அவருடன் செல்ல வேண்டும். அங்கு அவர் 1எம்டிபிக்கு தொடர்புடைய நிதிகள் காணாமல் போய்விட்டது மீதான விசாரணையை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும் என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று கூறினார்.
அதன் பின்னர், அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) மேற்கொண்டிருக்கும் அந்த விசாரணையின் “அடிப்படை மற்றும் தகுதி” குறித்து அவர் மலேசியர்களுக்கு தெரிவிக்கலாம் என்று கிட் சியாங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறார்.
பிரதமர் நஜிப் அமெரிக்காவுக்கு செல்லக்கூடாது, ஏனென்றால் அவர் “கொள்ளைக்காரர் மற்றும் எம்ஒ1” என்று டிஒஜேயால் முத்திரை குத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் நஜிப், டிரம்புடன் சமநிலையில் இருக்க முடியாது என்று கிட் சியாங் மேலும் கூறினார்.
ஆனால், பிரதமர் நஜிப் அங்கு போவதில் உறுதியாக இருப்பாரேயானால், சுல்கிப்ளி அவருடன் செல்ல வேண்டும். அங்கு அவர் எப்பிஐ (FBI) தலைவரைச் சந்தித்து 1எம்டிபி சம்பந்தமாக அமெரிக்க தொடர்ந்துள்ள வழக்கு பற்றிய மேல்விபரங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்றார் கிட் சியாங்.
ஐயா கிட் சியாங் அவர்களே !
இப்பதான் எம்எசிசி தலைவர் ஏதோ வாங்குகிற சம்பளத்துக்கு வேலையாவது செய்கிறார். நீங்க வேற எம்எசிசி தலைவரை நஜிப்புடன் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்று கூறுகிறீர்கள்.
பன்றியொடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பதை உறுதிப்படுத்த நினைக்கும் உங்களுடைய ராஜதந்திரம் புரிகிறது.