எதிர்வரும் பொதுத் தேர்தலில், பாஸுக்குப் போடும் ஓட்டு, பாரிசானுக்குப் போட்டதற்குச் சமம் என்று டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.
நேற்று, பாஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் முஹமட் காலில் அப்துல் ஹாடி, பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களிப்பது, டிஏபி-க்கு வாக்களிப்பதற்குச் சமம் என்று கூறியதற்கு, மகாதீர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
“பாஸுக்கு வாக்களிப்பது, பாரிசானுக்கு வாக்களித்து, நஜிப்பைத் தொடர்ந்து ஆட்சியில் வைத்திருப்பதற்குச் சமம்,” என்று ஹராப்பானின் தலைவருமான மகாதீர் கூறினார்.
முன்னதாக, டிஏபி-யின் நடவடிக்கைகள், ஹராப்பான் கூட்டணியில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், அக்கூட்டணியின் ஒவ்வொரு முடிவையும் அவர்கள்தான் தீர்மானிப்பது போல் உள்ளது எனவும் காலில் கூறியிருந்தார்.
இதுதான் அரசியல் விளையாட்டோ என்று தோன்றுகிறது. முன்னாள் பாரிசன் தலைவர் துன் மகாதீர் பாஸுக்குப் கொடுத்த தொந்தரவு மக்கள் அறிந்தது. அந்த மாநிலத்தை ஒரு வளர்ச்சி மாநிலமாக அடைய விடாமல் மிகவும் வறுமை நிலையில் வைத்து இருந்தார். தோக் குறு நிக் அஜிஸ் மாநில முதல் அமைச்சர் மிகவும் திறமையானவர் அத்துடன் மக்கள் அவரின் பேச்சை மதித்தனர் நல்ல பண்பாளர் அவர். துன் மகாதீர் அன்று நினைத்து இருந்தால் அந்த மாநிலத்தை மற்ற மாநிலங்களை விட ஒரு சிறந்த முன்னோடி மாநிலமாக கொண்டு வந்து இருக்க முடியும். ஏன் அவர் செய்யவில்லை. எல்லாம் அரசியல் தான் காரணம். இன்று பாஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் முஹமட் காலில் அப்துல் ஹாடி, பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களிப்பது, டிஏபி-க்கு வாக்களிப்பதற்குச் சமம் என்று கூறியதற்கு காரணம் அன்று டிஏபி கட்சியும் பாஸ் கட்சியும் எலியும் புனையும் மாக இருந்தன. அதுதான் இன்று அவர்கள் சொல்கிறார்கள். துன் மகாதீர் ஒரு மூத்தா அரசியல் வாதி அன்று செய்ததை இன்று இளம் பாஸ் கட்சி தலைவர் சொல்கிறார். என்ன தவறு.