சுற்றுலா துணை அமைச்சர் மாஸ் எர்மையாதி சம்சுடின், மலேசியர்கள் சவூதி அராபியாவில் திருமணம் செய்துகொள்ள அனுமதி இல்லை என்றும் அப்படிச் செய்வது அந்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும் என்றும் கூறினார்.
மலேசியர்கள் சவூதி அராபியாவில் திருமணம் செய்துகொள்வது ஒரு வழக்கமாக மாறி வருகிறது என்று கூறிய அவர், தம் அமைச்சு அங்கு திருமணம் செய்யக்கூடாது என்பதை யாத்திரிகர்களிடம் மற்ற மலேசியர்களிடமும் எடுத்துரைக்கும் என்றார்.
தாமும் இதை அறிந்திருக்கவில்லை என்றும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத்துறை (ஜாகிம்) நேற்று ஒரு கூட்டத்தில் இதைத் தெரிவித்தபோதுதான் அறிந்து கொண்டதாகவும் அவர் சொன்னார்.
சவூதி அராபியர்கள்-அல்லாதவர்கள் நிரந்தர குடியிருப்புத் தகுதி பெற்றிருந்தால் மட்டுமே அங்கு மணம் புரிந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது என்றவர் விளக்கினார்.
மற்றவர்கள் அங்கு திருமணம் செய்து கொண்டால், சவூதி அராபியாவால் அங்கீகரிக்கப்படாத அவர்களின் திருமணத்தை மலேசியாவில் பதிந்துகொள்வதில் பிரச்னைகள் ஏற்படும் என்று மாஸ் கூறினார்.
………. புத்தியை புனிததலத்திலும் கட்டிவிட்டார்கள்.