எதிர்வரும் பொதுத் தேர்தலில், 40 நாடாளுமன்ற இடங்களை வெல்வது பாஸின் இலக்காக இருக்கலாம் ஆனால், அது “அடுத்த அரசாங்கத்தை அமைக்கப்போகும்” மனநிலையுடன் செயல்பட வேண்டும் என அதன் தகவல் தலைவர் நஸ்ருடின் ஹசான் கூறினார்.
“பாஸ் ககாசான் செஜாத்ராவுடன் இணைந்து 14வது பொதுத் தேர்தலை நொக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது போட்டியிடும் தொகுதிகளில் வெற்றிபெறவும் தயாராகி வருகிறது.
“பாஸ், மக்கள் நல அரசை, இஸ்லாத்தின் வழியில் மேம்படுத்தப்பட்ட, அமைதிமிக்க ஒரு நாட்டை உருவாக்கும் பொறுப்புடன் நடந்து கொள்ளும்.
“பாஸ் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருமே ‘அடுத்த அரசாங்கத்தை அமைக்கக் காத்திருக்கும்’ மனநிலையுடன் செயல்பட வேண்டும்”, என்று நஸ்ருடின் அவரது முகநூல் பக்கத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.