சிலாங்கூர் பக்கத்தான் ஹரபான் தலைவர் அஸ்மின் அலி அக்கூட்டணியின் மாநில நிர்வாகிகள் பட்டியலை இன்று வெளியிட்டார். அதில் நான்கு பங்காளிக்கட்சிகளுக்கிடையில் 4: 3: 3:2 என்ற விகிதாசாரத்தில் நிர்வாக அதிகாரம் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.
பட்டியலில் அதிக இடங்கள் பிகேஆருக்கு. பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து)வுக்கு இரண்டு இடங்கள்.
அஸ்மின் நான்கு துணைத் தலைவர்களை நியமித்துள்ளார். டோனி புவா(டிஏபி), இஸ்ஹாம் ஹஷிம்( அமனா), அப்துல் ரஷிட் அசாரி(பெர்சத்து, சுபாங் எம்பி சிவராசா ராசையா(பிகேஆர்) ஆகியோரே அந்நால்வருமாவர்
பட்டியலில் அஸ்மின், சிவராசா தவிர, பிகேஆரின் அம்பாங் எம்பி சுரைடா கமருடின் செயலாளராகவும் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் தேர்தல் இயக்குனராகவும் உள்ளனர்.
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத் தலைவர் ஹன்னா இயோ(டிஏபி) பொருளாளர், பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ (டிஏபி) சிலாங்கூர் பக்கத்தான் ஹராபானின் சட்டப் பிரிவுத் தலைவர்.
அமனாவிலிருந்து கமருல் ஹிஷாம் இயோப் ஹஷிம் உதவிச் செயலாளராகவும் ஹுலு கிளாங் சட்டமன்ற உறுப்பினர் சாரி சுங்கிப் தேர்தல் அறிக்கை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெர்சத்து தலைவர் மன்ற உறுப்பினர் சுகிமான் சர்மானி சிலாங்கூர் ஹரபானின் தகவல் தலைவர்,
இன்று காலை சிலாங்கூர் ஹராபான் தலைவர்களின் கூட்டத்தை அடுத்து அஸ்மின் இப்பட்டியலை வெளியிட்டார்.
பக்கத்தானில் என்னதான் குழுக்கள் அமைத்தாலும், சிலாங்கூரில் தலைக்கு மேல் தொங்கும் ‘பாராங்’, பாஸ் கட்சி.
singam அவர்களே !நான்கொஞ்சம்மாற்றிசொல்ல ஆசைப்படுகிறேன்!!சிலாங்கூரில்தலைக்குமேல்தொங்கும் டுரியான்பாஸ்கட்சி!!
Mr.TAPAH BALAJI ! சிலாங்கூர் முதல்வருக்கு திரிசங்கு நிலை. பாஸ் கட்சியை ஆதரித்தாலும் ஆபத்து. ஒதுக்கினாலும் ஆபத்து. என்ன செய்யப் போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.
சிலாங்கூர் மாநிலத்தைப் பொறுத்தவரை சிலாங்கூர் பாஸ் பக்காத்தான் கூட்டணிக்குத்தான் ஆதரவு. பொதுத் தேர்தல் அறிவிப்புக்குப்பின் இது தெரிய வரும். இது மட்டும் அல்ல. இன்னும் பெரிய அதிர்ச்சி மாற்றங்கள் காத்திருக்கின்றன…அதில் ஒன்று புதிய ம.இ.கா…எனவே சிலாங்கூரில் ஆட்சி மாற்றம் என்பது ஹாடியின் அத்தைக்கு மீசை முளைத்த கதைதான்…