மலேசிய அரசாங்கம் மலேசிய தேசியமொழிப்பள்ளிகளுக்காக அறிமுகப்படுத்திய இருமொழித் திட்டத்தை தமிழ்ப்பள்ளிகள் அமலாக்கம் செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்தி வரும் மே 19 இயக்கத்தினர் பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி இந்த இருமொழித் திட்டத்தை அப்பள்ளியில் அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
அக்கோரிக்கையை பெட்டாலிங் ஜெயா தமிழ்ப்பள்ளி ஏற்றுக்கொள்ளாததைத் தொடர்ந்து மே 19 இயக்கத்தினர் அப்பள்ளிக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று அவ்வியக்கத்தின் வழக்குரைஞர் பாலமுரளி இன்று காலை கோலாலம்பூரில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளிக்கு எதிரான மே 19 இயக்கத்தினரின் வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 28 இல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.
பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளிக்கு எதிரான வழக்கின் வாதிகள்: 1. என். இராஜரெத்தினம் (பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்), 2. செ. செல்வம் (பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத்தின் தலைவர்), 3. கா. ஆறுமுகம் (மலேசிய இந்திய அரசுசாரா அமைப்புகளின் ஆலோசகர்) மற்றும் ஒரு பெற்றோர் என இவ்வழக்கை பதிவு செய்த வழக்குரைஞர் தினகரன் விளக்கமளித்தார் .
மேற்கூறப்பட்டவர்கள் தொடுத்துள்ள இவ்வழக்கின் பிரதிவாதிகள்: 1. மு. பஞ்சினியம்மாள் (பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர்), 2. தலைமை இயக்குனர், கல்வி அமைச்சு, மலேசியா, 3. கல்வி அமைச்சர் மலேசியா மற்றும் 4. மலேசிய அரசாங்கம், என்ற தகவலை பாலமுரளி இச்சந்திப்பில் வெளியிட்டார்.
இன்று காலை மணி 11.00 அளவில் தொடங்கிய இச்செய்தியாளர் சந்திப்பில் ஊடகச் செய்தியாளர்களுடன் இதர டிஎல்பி எதிர்ப்பு ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
காப்பார் நாடாளுமன்றன உறுப்பினர் மணிவண்ணனும் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அரசாங்கம் அறிமுகப்பட்டுத்தியுள்ள டிஎல்பி திட்டம் தாய்மொழிப்பள்ளிகளுக்கு (சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகளுக்கு) பெரும் நாசம் விளைவிக்ககூடிய திட்டமாகும். மே19 இயக்கத்தினர் டிஎல்பியை எதிர்ப்பதற்கு இது முக்கிய காரணம் என்று கூறிய பாலமுரளி, இந்த நாசகாரத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு அவற்றில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் நான்கு அடைவுகளை கட்டாயமாக எட்டியிருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு நிர்ணயம் செய்துள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
அந்த நான்கு அடைவுகளில் ஒன்று, பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளியைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானது. “பெற்றோர் ஆசிரியர் சங்கம் இதற்கு ஒப்புதலும் ஆதரவும் நல்க வேண்டும்.”
இத்திட்டத்தை அமல்படுத்த பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஒப்புதல் அளிக்கவில்லை. மாறாக கடுமையாக எதிர்க்கிறது. அதன் தலைவர் இராஜரெத்தினம் அப்பள்ளிக்கு எதிரான வாதிகளில் ஒருவர் என்று தெரிவித்த பாலமுரளி, அப்பள்ளியின் மேலாளர் வாரியமும் இத்திட்டத்தை எதிர்க்கிறது என்று அவர் அறிவித்தார்.
இச்செய்தியாளர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூர்த்தி என்பவர், முன்னாள் தலைமை நீதிபதி முகமட் நோர் தாய்மொழிப்பள்ளிகளுக்கு சட்டத்தில் இடமில்லை என்று கூறியிருக்கிறார். அப்படியானால் தமிழ்ப்பள்ளி நிலைக்க முடியாமா என்று வினவினார்.
இக்கேள்விக்குப் பதிலளித்த வழக்குரைஞர் கா. ஆறுமுகம், அரசமைப்புச் சட்டத்தில் தமிழ்ப்பள்ளிகள் இருக்க வேண்டும் என சொல்லப்படவில்லை. செக்சன் 152 (1) மலாய்மொழி தேசியமொழி என்று கூறுகிறது. அதே செக்சனில் மற்ற மொழிகளைப் பயன்படுத்துவதையும் கற்பதையும் எவரும் தடுக்க முடியாது என்று கூறுவதோடு மற்ற இனங்களின் மொழிகளைப் பாதுகாத்து பேணிவளர்க்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உரிமைகளை இச்சட்டம் பாதிக்கக்கூடாது என்று கூறுவதாக அவர் விளக்கினார்.
பெடரல் அரசமைப்புச் சட்டம் தாய்மொழிகளைக் கற்பிக்க, கற்க அனுமதிக்கிறது. மலேசியக் கல்விச் சட்டம் 1996 அதனை உறுதி செய்கிறது என்று ஆறுமுகம் மேலும் விளக்கம் அளித்தார்.
இந்த வழக்கில் தோல்வி அடைந்து விட்டால் என்ன செய்வது என்ற இன்னொரு கேள்விக்கு, “போராட்டம் தொடர வேண்டும்”, என்று உரத்த குரலில் பலரும் பதில் அளித்த வேளையில், இந்த வழக்கின் வழி தங்களின் வாதம் இரண்டு வகையாக இருக்கும் என்றார் தினகரன். முதலாவது, இந்தத் திட்டம் ஒரு கொள்கையல்ல எனவே இதன் அமலாக்கம் சட்டத்திற்கு புறம்பானது என்றார். இரண்டாவதாக, இந்த திட்ட அமலாக்கத்தில் உள்ள சீர்கேடுகளாகும். இதன் முழுமையான வாதத்தை நீதிமன்றத்தில் சமர்பிப்போம் என்றார்.
இதனால் தலைமை ஆசிரியர்களுக்கு எதாவுது கமிஸ்சன் கிடைக்குதா என பார்க்க வேண்டும். எதனால் ,மல்லு கட்டி இந்த திடத்தை அமுலாக்க துடிக்கணும். தமிழில் உருப்படியா வகுப்பு நடத்த த்ரியலான வேறு வேலைக்கு போகலாம். அதை விடுத்து தமிழ் கல்வியை ஒழிக்க முன் வரக்கூடாது
1. இந்த விவகாரம் பெற்றோர்களின் விருப்பத்தை பொருத்தது; தலைமை ஆசரியர்கள் வெறும் அரசு ஊழியர்கள்; அவர்களுக்கு இதில் முடிவெடுக்கும் அதிகாரமில்லை. நமக்கு கொஞ்சமாவது அறிவிருந்தால் இப்படியெல்லாம் செய்யமாட்டோம்; 2. தமிழ்ப் பள்ளிகள் நமக்குக் கிடைத்த சுதந்திரப் பரிசு; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நாட்டிற்கு பெரும் மிரட்டலாகயிருந்த கமினூச (Communism) பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றியதற்கும் நமக்கும் பெரும் பங்குண்டு; அதனால் பல உயிர்த் தியாகங்களை நம் முன்னோர்கள் செய்துள்ளார்கள்; அதற்குப் பின் சுதந்திரத்திரத்திற்காகவும் போராடினோம்; அதன் பரிசாகக் கிடைத்ததுதான் இங்கே இந்த சுதந்திரமான வழிப்பாடுகளும், தமிழ் பள்ளிகளும்; நாட்டின் முதற்ப் பொதுத் தேர்தலில் தமிழ் சீனப் பள்ளிகள் தொடர்ந்திருப்பதற்கு தேர்தல் கூட்டணி அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. நமக்கு சும்மா எதுவும் கிடைக்காது; கிடைப்பதுமில்லை. நம் முன்னோர்கள் செய்தத் தியாகங்களை நாம் கொச்சைப் படுத்தக் கூடாது; இதை எல்லாத் தலைமை ஆசிரியர்களும் நன்கு உணரவேண்டும்; குறிப்பாக ம இ க வினருக்கும் சேர்த்துதான் இந்தச் சேதி. 3. இந்த இயக்கத்தினர் வழக்குப் போட்டதில் எந்தத் தவறுகளுமில்லை; வழக்கில் வெற்றிப் பெறுவதை உறுதிச் செய்யமுடியுமாயென்பது தான் முக்கியம்; நல்ல நீதிபதிகளாகயிருந்தால் நம் வெற்றி நிச்சயம். 4. பொதுவாக நம்மிடையே கொஞ்சமும் தமிழுணர்வுயில்லாத இப்படிப் பட்ட மிகக் கேவலமானவர்களிருப்பது மிகவும் வெக்கக் கேடானது. இப்படிப் பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு தமிழில் “அ” என்ற எழுத்து என்ன எழுத்தென்றேத் தெரியாது; இந்த “அ” என்ற எழுத்து அகர யெழுத்தென்றாலும் அதுவும் தெரியாது; எவ்வளவு சிறப்பு வாய்ந்த எழுத்தை நாம் பெற்றுள்ளோம்; ஆனால் இவர்களெல்லாம் தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசரியர்கள். நாம் ஆங்கிலம், தேசிய மொழி இவற்றை முறையாகக் படித்திருந்தால், நம் நாட்டின் கடந்தக் கால வரலாறுகளையும் முறையாக அறிந்திருந்தால் இப்படியெல்லாம் செய்யமாட்டோம்; மேலும் அன்றாட நாட்டு நடப்பு நிகழ்ச்சிகளையும் உலக நடப்புக்களையும் நாம் நன்றாக அறுந்திருந்தால் இப்படியெல்லாம் இவ்வளவுக் கேவலமாகவும் நடந்துக் கொள்ள மாட்டோம். தமிழ்ப் பள்ளிகளுக்கு வழிக் காட்டியாகயிருக்க வேண்டிய இவர்கள் அரசியல்வாதிகளை விட மிகக் கேவலமாக இருக்கின்றார்களே! நினைத்துப் பார்த்தால், இவர்களின் செயல்பாடுகள் மிகவும் வருத்தமாகவும் வேதனையாகவுமுள்ளது.