குவான் எங்: சீனப்பள்ளிக்கு செல்வதிலிருந்து நான் தடுக்கப்பட்டதற்கு விளக்கம் வேண்டும்

 

GuanEngwhybarmeபுக்கிட் மெர்தாஜாம், சுங்கை லெம்புவிலுள்ள ஒரு சீனப்பள்ளிக்கு நிதி உதவி அளிக்க தம்மை போகவிடாமல் தடுத்தது ஏன் என்று கல்வி அமைச்சு விளக்க அளிக்க வேண்டும் என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகிறார்.

தம்மை அப்பள்ளிக்குப் போக விடாமல் தடுப்பது ஜனநாயக கோட்பாடுகளைக் கேலிக்கூத்தாக்குவதாகும் என்று குவான் எங் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“பினாங்கு அரசை ஏன் துன்புறுத்துகிறீர் மற்றும் அதன் முதலமைச்சரை கொடுமைப்படுத்துகிறீர்? நாங்கள் செய்ய விரும்புவதெல்லாம் நிதி உதவி அளிப்பதாக இருக்கையில் எங்களை அந்தப்பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுப்பதற்கு எந்த காரணமும் இல்லை.

“நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், இந்நாட்டின் ஒரே சீன முதலமைச்சர் நான் மட்டுமே, அப்படி இருந்தும், நான் எனது சொந்த மாநிலத்திலுள்ள ஒரு சீனமொழி தொடக்கப்பள்ளியில் நுழைய முடியாது, அதுவும் கல்வி அமைச்சுக்கு அதைப் பற்றி கடிதத்தின் வழி தெரிவிக்கப்பட்டிருந்தும். இதை நான் இதற்கு முன்னர் அனுபவித்ததில்லை. இது ஏனென்றால் பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதாகும்”, என்று அவர் கூறினார்.

செப்டெம்பர் 6 இல், அப்பள்ளிக்குச் செல்வதற்கு அனுமதி இல்லை என்று கூறும் கடிதத்தை குவான் எங் பினாங்கு கல்வி இலாகாவின் இயக்குனர் ஷாரி ஓஸ்மானிடமிருந்து பெற்றார்.

அம்னோ தலைவர் அப்பள்ளிக்குச் செல்லலாம்

அம்னோ “சீனமொழிக் கல்வியை ஆதரிக்காத போதிலும்” அக்கட்சியின் தலைவர் ஒருவர் அப்பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று குவான் எங் கூறினார்.

“சிம் (முதலமைச்சர்) பதவிக்கு மரியாதை இல்லை, ஆனால் அதெப்படி ஒரே ஒரு மொழிக் கல்வியை ஆதரிக்கும் கட்சியான அம்னோவின் தலைவர் ஒருவர் அப்பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்”, என்று குவான் எங் மேலும் வினவினார்.