சிறப்பு விவகாரத்துறை(ஜாசா) தலைமை இயக்குனர் முகம்மட் புவாட் ஸர்காஷிக்கு எதிராக போலீஸ் செய்யுமாறு டாக்டர் மகாதிர் முகம்மட்டின் வழக்குரைஞர், போரெக்ஸ் மீதான அரச விசாரணை ஆணையத்தின் செயலாளரிடம் வலியுறுத்துவார்.
புவாட் நேற்று விடுத்திருந்த அறிக்கையால், பேரரசரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் ஆணையத்தின் கெளரவத்தையும் புனிதத்தையும், தகுதியையும் மாசுபடுத்தி விட்டார் என வழக்குரைஞர் முகம்மட் ஹனிப் கத்ரி அப்துல்லா கூறினார்.
அவரின் அறிக்கை 1950 விசாரணை ஆணையச் சட்டம் பிரிவு 12 (2)-ஐ மீறுகிறது என முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராம் கூறியிருப்பதைத் தாம் ஒப்புக்கொள்வதாகவும் கத்ரி தெரிவித்தார்.
ஜாசா வெளியிட்டிருந்த அறிக்கையில் புவாட், புதன்கிழமை ஆர்சிஐ-இடம் சாட்சியமளித்த பேங்க் நெகாராவின் முன்னாள் ஆலோசகர் நோர் முகம்மட் யாக்கூப் அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் மீதும் நிதி அமைச்சர் அன்வார் இப்ராகிம்மீதும் பழி போடுவதைத் வேண்டுமென்றே தவிர்த்தார் எனக் குறிப்பிட்டார்,
1997-இல் ஆசிய நிதி நெருக்கடியின்போது தம்மை மீண்டும் நிதி ஆலோசகராக நியமித்த மகாதிருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதத்தில்தான் நோர் முகம்மட் அவ்வாறு நடந்து கொண்டாரா என்றும் புவாட் வினவினார்.