புவாட்டின் தற்காப்புக்குப் பாய்ந்து வந்தது ஜாசா

rciசிறப்பு  விவகாரத்துறை (ஜாசா),   அதன்   தலைமை  இயக்குனர்   முகம்மட்  புவாட்   ஸர்காஷி  அரச    ஆணைய  விசாரணை  தொடர்பில்   தெரிவித்த  கருத்து    சாட்சியை   மிரட்டுவதாக   உள்ளது  எனக்  கூறப்படுவதை   மறுக்கிறது.

அரசாங்கத்துக்காக     பிரச்சாரப்  பணிகளைச்   செய்துவரும்   ஜாசாவின்  தலைமை   இயக்குனர்    முகம்மட்  புவாட்   ஸர்காஷி,   ஆர்சிஐ-இல்   பேங்க்   நெகராவின்  முன்னாள்   ஆலோசகர்    நோர்  முகம்மட்  யாக்கூப்  அளித்த   சாட்சியம்    முன்னாள்  பிரதமர்  டாக்டர்   மகாதிர்  முகம்மட்டை    வெளிநாணயச்   செலாவணி   மோசடியிலிருந்து  பாதுகாப்பதுபோல்   உள்ளதாக  கூறியிருந்தார்.

அவரது  கூற்று      1950 விசாரணை  ஆணையச்   சட்டம்  பிரிவு 12 (2)-ஐ  மீறுவதாக  உள்ளது   என    முன்னாள்   கூட்டரசு   நீதிமன்ற   நீதிபதி    கோபால்  ஸ்ரீராம்  கருத்துத்   தெரிவித்திருந்தார்.

அதற்குத்தான்   எதிர்வினை   ஆற்றியுள்ளது   ஜாசா.

“முகம்மட்   புவாட்   ஸர்காஷியின்  கருத்து    சாட்சியை  மிரட்டுவதாக  உள்ளது   என்று  எப்படிக்  கூறலாயிற்று?

“1950  விசாரணை  ஆணைச்  சட்டத்தின்   பிரிவு  14-கின்படி   பார்த்தால்   அது  ஆணையத்தை   ‘அவமதிப்பதும்’  ஆகாது”,  என  ஜாசாவின்   அறிக்கை  கூறியது.

புவாட்  ஒரு  கேள்வியுடன்தான்   அறிக்கையைத்  தொடங்கியுள்ளார்.

வெளிநாணய   பரிவர்த்தனையில்    நோர்  முகம்மட்டுக்கு  அங்கீகாரம்  அளிக்கும்   அதிகாரத்தைக்  கொடுத்தது   யார்   என்று  புவாட்   கேட்டிருந்தார்.

சாட்சி   வேண்டுமென்றே  அப்போதைய   பிரதமர்  டாக்டர்  மகாதிரைப்  பாதுகாக்க  முனைகிறாரா  என்றும்   அவர்  வினவினார்.

“எப்போதிருந்து  பொதுமக்கள்   கேள்வி   கேட்பது   சாட்சியை   மிரட்டுவதாகக்  கருதப்படுகிறது?” , என்று  ஜாசாவின்  வினவியது.