பைரின் அறிக்கை என்னவாயிற்று? பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் வாரிசான் கேள்வி

leikingசாபா   சட்டவிரோதக்  குடியேறிகள்  பிரச்னையைக்  கவனிக்க  அமைக்கப்பட்ட  மாநில  நிரந்தரக்  குழு  பிரச்னைகளுக்குத்  தீர்வுகளை   எடுத்துரைக்கும்   அதன்   அறிக்கையை   வெளியிடாமல்  இருப்பதற்குக்  கண்டனம்  தெரிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளில்   குற்றச்செயல்களில்   ஈடுபட்டவர்கள்   என்று   சந்தேகிக்கப்படும்   சிலர்   சாபாவுக்குள்   நுழைந்து,  பின்னர்  தீவகற்ப   மலேசியாவில்  பிடிபட்டிருப்பதாகக்  கூறப்படுவதால்  அந்த   அறிக்கையை  வெளியிடுவது   அவசியமாகிறது    என்று  பார்டி   வாரிசான்   சாபா  துணைத்  தலைவர்   டெரெல்   லெய்கிங்  கூறினார்.

“சிலர்  மக்கள்  தன்னார்வப்  படை  (ரேலா)  முதலிய   பாதுகாப்பு  அமைப்புகளிலும்    ஏற்கனவே   இருக்கிறார்கள்  என்பது  கவலையளிக்கிறது”,  என்று  லெய்கிங்    ஓர்   அறிக்கையில்   கூறினார்.

மலேசியர்கள்   அல்லது   சாபா  மக்களின்  அடையாள  அட்டை   எண்களைக்   கொண்டுள்ள   மலேசியர்-அல்லாதார்   ஏற்கனவே  வாக்காளர்   பட்டியலிலும்   இடம்பெற்றிருக்கிறார்கள்.

2014-இல்  சாபா  சட்டவிரோத  குடியேறிகள்   விவகாரம்   தொடர்பில்   அரச  விசாரணை    ஆணையம்  ஒன்று   அமைக்கப்பட்டது.   அதன்  விசாரணையில்   அரசு   அதிகாரிகளைக்  கொண்ட   ஒரு  குழு  பெரும்   எண்ணிக்கையிலான   வெளிநாட்டவருக்கு   மலேசியக்   குடியுரிமையைச்  சட்டவிரோதமாக     வழங்கி  வந்திருப்பது   தெரிய  வந்தது.

அதனை  அடுத்து   அப்பிரச்னையைக்  களைவதற்கு  பார்டி  பெர்சத்து    சாபா   தலைவர்   ஜோசப்  பைரின்   தலைமையில்  புத்ரா  ஜெயா   ஒரு  நிரந்தரக்குழுவை   அமைத்தது.

பைரின்  2015க்குள்   சட்டவிரோதக்  குடியேறிகள்   மீதான    அறிக்கை    தயாராகிவிடும்   என்று   வாக்களித்தார்.

பைரின்  குழுவினர்   அறிக்கையை   விரைவில்   வெளியிட  வேண்டும்,   தவறினால்   எதிரணியினர்   அதை   ஒரு  தேர்தல்   விவகாரமாக்கி  விடுவர்   என  லெய்கிங்  கூறினார்.