ஜாஹிட் அவர்களே, உங்கள் கருணைக்கண் நம் நாட்டுப் பக்கமாகவும் திரும்ப வேண்டும்

dpmதுணைப்  பிரதமர்   அஹமட்  ஜாஹிட்  ஹமிடி,  நாட்டற்றவர்களாக   அல்லல்படும்  ரொஹின்யா  மக்கள்பால்   அனுதாபம்  காட்டுவதைப்  பாராட்ட   வேண்டும்,  அதேவேளையில்    அவர்   மலேசியாவில்     நாடற்றவர்களாக   உள்ள   ஆயிரக்கணக்கான   பிள்ளைகளின்பாலும்       அனுதாபம்   காட்ட  வேண்டும்    என்கிறார்  டிஏபி  எம்பி  ஒருவர்.

போரினால்  பாதிக்கப்பட்ட   ரொஹின்யா  மக்களுக்காக   ஜாஹிட்   மனமுவந்து நன்கொடை   இயக்கம்  ஒன்று  தொடங்கியிருப்பது   மனத்தைத்   தொட்டு  விட்டதாகக்  கூறிய   கூலாய்   எம்பி  தியோ   நை   ச்சிங்,    அவர்   அதே  பரிவை   மலேசியாவில்    நாடற்றவர்களாக     உள்ளவர்களின்   விசயத்திலும்   காட்ட   வேண்டும்   என்றார்.

“மலேசியாவில்   நாடற்றவர்களாக   பல்லாயிரக்கணக்கானோர்   உள்ளனர்.  அவர்களுக்காக   ஏதாகிலும்   நன்மை   செய்ய     ஜாஹிட்   இதுவரை  முற்பட்டதில்லை.

“அவர்,  நாடாளுமன்றத்தில்    எழுத்து  வடிவில்   வழங்கிய  ஒரு  பதிலில்   மலேசியாவில்   2012க்கும்  2017க்குமிடையில்  பிறந்த   15,394   குழந்தைகளுக்கு   அவர்களின்   தந்தையர்   மலேசியர்கள்   என்ற  போதிலும்   குடியுரிமை  மறுக்கப்பட்டதாகக்  கூறினார்.

கடந்த   ஆண்டு  நவம்பரில்,  உள்துறை  அமைச்சர் (ஜாஹிட்)  மலேசியாவில்    18வயதுக்கும்   குறைவான  290,437 சிறார்கள்   இருப்பதாக  தெரிவித்தார்.

“இந்த  எண்ணிக்கை   பெர்லிஸ்  மக்கள்தொகையைவிட   அதிகமானது”,  என  நை   ஓர்   அறிக்கையில்   கூறினார்.