மந்திரி புசார்களும் முதலமைச்சர்களும் பள்ளிக்கூடங்களுக்கு வருகை மேற்கொள்ள நினைத்தால் முன்கூட்டியே கல்வி அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என பினாங்குக் கல்வித்துறை இயக்குனர் ஷாரி ஒஸ்மான் இன்று கூறினார்.
மாநிலத் தலைவர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிவதற்குமுன் கல்வி அமைச்சரின் அனுமதியைப் பெறுவதுதான் வழக்கம் என்றாரவர்.
“நாங்கள் பள்ளிகளின் நலனைக் கவனிக்க வேண்டியுள்ளது. பொதுமக்களாக இருந்தால்கூட மாநிலக் கல்வித்துறையின் அனுமதியைப் பெற வேண்டும். அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்க உறுப்பினர்களாக இருந்தால் தேவையில்லை. ஆனால், பள்ளிகள் திறந்த தினம் கொண்டாடும்போது அனுமதி பெறாமல் அவர்கள் செல்லலாம்”, என்று ஜார்ஜ்டவுனில் அவர் கூறினார்.
புக்கிட் மெர்தாஜாம், சுங்கை லெம்புவில் சீனப் பள்ளி ஒன்றுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் கூறியிருப்பதற்கு எதிர்வினையாற்றியபோது ஷாரி அவ்வாறு கூறினார்.
ஆளுங்கட்சியினற்கும் இது பொருந்துமா ? இனி மலஜலம் கழிப்பதற்கும் அந்தந்த இலாகாவிடம் அனுமதி பெறவேண்டி வரலாம் ! ஆளுங்கட்சியினர் ஆலோசித்துக் கொண்டிருப்பதாக “பல்லி” சொல்லி பல்லிளித்தது. “முட்டி”யில் மூளையுள்ள எருமைகள் !
மக்களால் தேர்ந்தெடுத்த பிரதிநிதிக்கு எவ்வளவு மரியாதை . என்று பாருங்களேன். மரியாதை கெட்ட ஈன ஜாதிகளிடம் மரியாதை எதிர் பார்ப்பது தப்புதான்.