டிரம்பும் நஜிப்பும் பாதுகாப்புப் பற்றிப் பேசுவார்கள், மோசடி விவகாரம் பற்றியல்ல

msia இன்று   வெள்ளை  மாளிகை     செல்லும்   மலேசிய  பிரதமர்  நஜிப்  அப்துல்   ரசாக்கை   அமெரிக்க   அதிபர்   டோனல்ட்  டிரம்ப்   வரவேற்பார்.   அவர்களின்  பேச்சு  பாதுகாப்பு   விவகாரங்களில்தான்   கவனம்   செலுத்தும்.  மலேசியாவில்   நிகழ்ந்ததாகக்  கூறப்படும்   ஊழல்  விவகாரம்மீது   அமெரிக்க    நீதித்துறை   மேற்கொண்டுள்ள  விசாரணை  அவர்களின்  பேச்சில்   அடிபடாது.

இந்த    வருகை   நஜிப்புக்கு    முக்கியமான    ஒன்று.  ஏனென்றால்,  அடுத்த   ஆண்டு   தேர்தலைச்  சந்திக்கவுள்ள   நஜிப்புக்கு,  1மலேசியா  மேம்பாட்டு   நிறுவனம்(1எம்டிபி)  மீது   அமெரிக்க   நீதித்துறை(டிஓஜே)   புலனாய்வு   நடத்திக்  கொண்டிருந்தாலும்  வெள்ளை  மாளிகை    கதவு   தமக்கு   இன்னும்   திறந்தே  உள்ளது   என்பதைக்  காட்டிக்கொள்ள    இது   ஒரு  நல்ல   வாய்ப்பு.

நஜிப்பால்   உருவாக்கப்பட்ட   நிறுவனம்தான்  1எம்டிபி. அந்நிறுவனத்தின்மீது,  அமெரிக்கா,  சுவிட்சர்லாந்து,  சிங்கப்பூர்    உள்பட    ஆறு    நாடுகளில்   பணச்சலவை  குற்றம்   சாட்டப்பட்டு  புலனாய்வு   நடந்து   வருகிறது.   ஆனால்  நஜிப்  குற்றம்   எதுவும்  செய்யவில்லை   என்கிறார்.

வெள்ளை  மாளிகை   டிஓஜே   விசாரணை  குறித்துக்  கருத்துரைக்கப்   போவதில்லை   என்று   கூறியுள்ளது.

டிரம்ப்,  வட  கொரியாவின்    சினமூட்டும்   செயல்கள்  குறித்தும்   தென்கிழக்காசியாவில்  ஐஎஸ்   செல்வாக்கைத்  தடுத்து   நிறுத்தும்   வழிவகைகள்   குறித்தும்   நஜிப்புடன்  விவாதிக்க   திட்டமிட்டிருப்பதாக    வெள்ளை  மாளிகை   பேச்சாளர்    சாரா   செண்டர்ஸ்   நேற்று   செய்தியாளர்களிடம்    தெரிவித்தார்.