மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) தலைவர் சுல்கிப்ளி அஹ்மட், ஆணையத்தை நினைத்து கையூட்டுக் கொடுப்பவர்கள் பயப்படுகிறார்கள் என்கிறார்.
எம்ஏசிசி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த செய்திகளைச் சுட்டிக்காட்டிய சுல்கிப்ளி, ஆணையம் குறித்து அச்சம் நிலவுவது உண்மைதான் என்றார்.
“நான் சந்தித்த பலர், ஊழல் குறைந்திருப்பது கண்கூடு என்று தெரிவித்தனர். இது எங்கள் நடவடிக்களால் விளைந்த பலன்”, என்றுரைத்த அவர், நடவடிக்கைகள் தொடரும் என்றார்.
உங்கள் கதையெல்லாம் கேட்டுக்கேட்டு புளித்துவிட்டது . முதலில் 1MDB திருடனைப் பிடித்து உள்ளே வையுங்கள். விதையுள்ளவர்கள் என்று நிரூபியுங்கள் !
ஐயா அவர்களே வணக்கம் . சமீபகாலமாக தங்கள் குழுவின் அதிரடி வேட்டையில் ஒருசில முதலைகளும் , நடுத்தர மீன்களும் அகப்பட்டு , நடவடிக்கை எடுப்பதில் மிக்க மகிழ்ச்சி . அதிரடி வேட்டை மட்டும் மேற்கொள்ளாமல் அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதிலும் உறுதி கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் . நாட்டில் அதிகமான வன்முறை , குண்டர்தனம் நிகழ்வதற்கு இலஞ்சமே மூலகாரணமாக அமைகிறது என்பது எனது கருத்தாகும் . ஒரு இனம் இந்த இலஞ்சம் இல்லாமல் வாழ்த்திட முடியாது என்ற கொள்கையில் மூலமாக இந்த வன்முறை , குண்டர்தனம் கட்டுகடுங்காமல் மேலோங்கி செல்கின்றது , நடைபெறுகின்றது என்பது அனைவரும் அறிவர் . உண்மயிலையே குற்றம் இழைத்தவர் , காவல் துறையால் பிடிபட்டு , நீதிமன்றம் சென்றபிறகு , நீதிமன்றத்தில் “தான் தவறு செய்யவில்லை” என கூறி , அரசாங்கத்தாரப்பில் வாதாடும் வக்கீல்களால் வாதி செய்த குற்றதை நிரூபிக்க முடியாமல் குற்றம் செய்த்தவர் உல்லாசமாக வெளியில் உலவருவதை தினம் தினம் காண்க முடிகிறது , இதன் காரணமாக குற்றம் மீண்டும் மீண்டும் தலைவிரித்தாடுகிறது . இதனை மனதை நிலைகொண்டு குற்றம் இழைப்போருக்கு இலஞ்சம் மூலமாக துணைபோகும் ஆசாமிகளுக்கு வலை வீசும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் . நன்றி .
எல்லாம் வெறும் கண்துடைக்கும் பேச்சு— உதாரணத்துக்கு EDL எனப்படும் விரைவு சாலை jb குடிநுழைவிலிருந்து பாசிர் குடாங் வரை — போடப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? இன்றைய நிலை உபயோகிப்பவர்களுக்கு தெரியும்– MACC என்ன புடுங்கி கொண்டிருக்கிறது? விசாரிக்க வேண்டியது தானே?
இப்போது நமது பிரதமரின் 2.6 பில்லியன் கையூட்டை “நன்கொடை” என நாடே ஏற்றுக்கொண்ட பிறகு
இப்போது கொடுப்பதும் வாங்குவதும் நன்கொடையாக மாறிவிட்ட பிறகும்,
உங்கள் அறிக்கை நன்கொடையை கையூட்டு என கொச்சை படுத்துவதுபோல் உள்ளது.