மலேசிய ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் பி.வேதமூர்த்தி, அந்த அமைப்பு 13வது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு ஆதரவாக செயல்பட்டது தப்பு என்பதை ஒப்புக்கொண்டார்.
முன்பிருந்த பக்கத்தான் ரக்யாட்டில் சேரத்தான் ஹிண்ட்ராப் விரும்பியது. அதற்காக பல தடவை பேச்சுகளையும் நடத்தியது. அவை பலனளிக்கவில்லை என்பதால், வேறுவழியின்றி ஹிண்ட்ராப் பிஎன் பக்கம் சென்றது என்றாரவர்.
“ஆமாம். நாங்கள் அப்போது ஒரு தவறு செய்து விட்டோம். 2013-இல் பிஎன்னை ஆதரித்தது உண்மைதான். துரதிர்ஷ்டவசமாக அப்படி நடந்துகொள்ள வேண்டியதாயிற்று.
“பிஎன் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாது என்பது எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு வேறு வழியில்லாது போயிற்று. 20தடவைக்குமேல் பக்கத்தான் ரக்யாட்டுடன் பேச்சு நடத்தினோம்……அவர்களுடன் உடன்பாடு காண முடியவில்லை.
“இந்திய சமூகத்துக்கு அவர்கள் அளிக்க முன்வந்த உதவிகள் ஏற்புடையவையாக இல்லை. அதன்பின்னர் பிஎன் வந்தது. எங்களுக்கு நம்பிக்கை இல்லைதான். எழுத்து உடன்பாடு செய்துகொள்ளலாம் என்றனர்.சரி என்றோம்”, என வேதமூர்த்தி நேற்றிரவு ஒரு கருத்தரங்கில் கூறினார்.
பிஎன்னுடன் உடன்பாடு செய்துகொண்ட பின்னர் வேதமூர்த்தி செனட்டர் ஆக்கப்பட்டு ஒரு துணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். எல்லாம் எட்டு மாதத்துக்குத்தான். 2014 பிப்ரவரி-இல், வேதமூர்த்தி பிஎன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் ஆகவே பதவி விலகுவதாகவும் அறிவித்தார்.
பிஎன் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை என்று கூறியதை அப்துல் ரஹ்மான் டஹ்லான், ஹிஷாமுடின் உசேன் போன்ற அமைச்சர்கள் மறுத்தனர்.
பதவி விலகியதிலிருந்து குறைந்த வருமானம் பெறும் இந்திய சமூகத்தினருடன் கலந்து பேசிவருவதாக வேதமூர்த்தி கருத்தரங்கில் கூறினார்.
“பல விவகாரங்கள் பற்றிப் பேசினோம். ஒரு விசயத்தில் அனைவருக்கும் உடன்பாடு இருந்தது. பக்கத்தான் ஹரபானில் இந்தியர்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதுதான் அது.
“அதனால்தான் ஹரபானின் ஐந்தாவது பங்காளிக் கட்சியாகும் நோக்கத்துடன் பக்கத்தான் ஹரபான் தலைவர்களுடன் பேச்சைத் தொடங்கினேன்”, என்று வேதா கூறினார்.
ஹிண்ட்ராப் தேர்தல் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து விட்டது என்று கூறிய அவர், அதன் உதவியுடன் ஹரபான் இப்போது வைத்திருப்பதைவிட 31 நாடாளுமன்ற இடங்களையும் 51 சட்டமன்ற இடங்களையும் கூடுதலாக வெல்ல முடியும் என்றார்.
ஹிண்ட்ராபின் பத்தாமாண்டு நிறைவை முன்னிட்டு நவம்பர் 25-இல், மெர்போக்கில் பேரணி ஒன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது என வேதமூர்த்தி தெரிவித்தார்.
அரசியல் கட்சியாவதற்கு ஹிண்ட்ராப் சங்கப் பதிவகத்திடம் விண்ணப்பம் செய்துள்ளது. இன்னும் அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.
இதனிடையே, அடுத்து வரும் வாரங்களில் ஹரபான் கூட்டணியில் உறுப்புக் கட்சியாவதற்கும் அது முறைப்படி மனுச் செய்துகொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
நல்லதே நடக்கும் என்று நம்புவோம் .ஆளுங்கட்சி உடன் உறவு வைத்தது ஒரு முயற்சியே ..முயற்சி பயனலோக்கவில்லை என்றதும் மாற்று வலி தேர்ந்தெடுத்தாதார்க்கு வாழ்த்து ..வெற்றி எல்லோரும் ஒற்றுமையிலும் இருக்கு ..வெற்றி தனி ஒருவனது இல்லை .
வேதமூர்த்தி, வேறுவேளை இருந்தால் பாருமய்யா. இந்தியர்களின் கோவணமாவது மிஞ்சட்டுமே !
கண் கெட்டப் பிறகு சூரிய வணக்கம் செய்கின்றீர். எங்கே அக்காலத்தில் தங்களுக்கு ஆலோசகராக இருந்தோர் எல்லாம்?
மற்ற தலைவர்களை விட இவர் இப்போ ஒரு சுறு சுறுப்புமிக்க தலைவர் என்றே தோன்றுகிறது. இவர் சொல்கிறார் நாங்கள் அப்போது ஒரு தவறு செய்து விட்டோம் இப்போ திருந்தி விட்டோம் என்று கூறுவது… சிரிப்பு வருகிறது. காரணம் ஒரு கொலைகாரன் கொலையை செய்து விட்டு நான் திருந்தி விட்டேன் மன்னித்து விடுதலை செய்யுங்கள் நல்லவனாக மாறி விடுகிறேன் என்பது போல உள்ளது. உங்கள் புதிய கொள்கைகள்….. திருடனை மன்னித்து விடலாம் கொலையாளியை எப்படி மன்னிப்பது. திரு. உதயகுமார் உங்களுடன் சேர்ந்து பணியாற்ற வருவர. அப்படி அவர் உங்களுடன் சேர்ந்து இந்த ஹிண்ட்ராப் கட்சியில் இணைந்து வருவார் என்றால் நிச்சயம் கட்சி அதிக இடங்கள் பிடிக்கும் என்பது என் கருத்து. திரு. உதயகுமார் அவர்தான் உண்மையாக இந்திய சமுதாயத்திற்கு வர வேண்டிய தலைவர். நீங்கள் சொல்வது எல்லாம் ஏற்கனவே ஒரு மகா தான தலைவர் சொல்லிவிட்டார். அந்த தலைவர் இந்திய சமுதாயத்தை வானு உயர இந்திய சமுதாயத்தை கொண்டு செல்ல போகிறான் என்று கூறினார். ஒரு மண்ணையும் காணோம். நீங்கள் புதியதாக ஏதும் இருந்தால் சொலுங்கள் ஐயா. அடுத்து நமது பிரதமர் நஜிப் மாற்ற பிரதமர்களை விட அதிகமாக இந்திய சமுதாயத்திற்கு செய்து உள்ளார் இது இந்திய சமுதாயத்தில் மறுப்பு இல்லையே. நீங்கள் நமக்கு ஒரு நல்ல தலைவர் தான். மறுப்பு இல்லை. 13வது பொதுத் தேர்தலில் பிஎன்னுடன் ஒத்துழைத்தது தப்புத்தான் என்று கூறும் நீங்கள் இப்போ புதியதாக சேரும் இந்த பக்கத்தான் ஹரபானும் கட்சியும் அவர்களை போன்று செய்தால் என்ன சொல்வீர்கள். அதுவும் நமது சமுதாயத்தை கொஞ்சம் கொஞ்சம்மாக ஓரம் கட்டிய முன்னாள் பிரதமர் மறுபடியும் ஆட்சிக்கு வந்து முன்பு செய்தால் நீங்கள் அப்போது என்ன செய்விர்கள்… சொல்விர்கள். இபோதே நமக்கு தெளிவு வேண்டும்….உங்களிடம்.
சுயநல போக்கு உங்கள் நடவடிக்கையின் செயல்பாடு. உடன் பிறந்த அன்னனேயே உதறிவிட்டு சுயநலத்தால் தேசிய முன்னணியுடன் உறவு வைத்தீர்கள்.நீங்கள் பதவி பிரமாணம், உங்கள் அண்ணன் சிறைவாசம். கபட வலையில் சிக்கியது உங்கள் செயல்பாடு. இன்று புதிய பரிணாமம் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு. உண்மையின் உரிமை போராடடம் உதயகுமார் உருவெடுத்த மக்கள் விழிப்புணர்வு.
நமது நாட்டில் இந்தியர்களுக்கு இருக்கும் அரசியல் கட்சிகள் பத்தவில்லை ! உங்கள் இண்ராப் பையும் அரசியல் கட்சியாக பதிவு செய்து நீங்களும் ஒரு கட்சியின் தலைவராகி நாலு காசு பாக்கலாமே !!மெர்போக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பேரணிக்கு வசூல் எவளவு ! அள்ளி தருகிறோம் ! இன்னும் நாங்கள் எல்லாம் முட்டாள் கள் என்று தானே ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறீர்கள் !!
மலேசிய இந்தியர்களுக்கு இதுவரை எந்த ஒரு தலைவரும் செயல் திட்டம் போட்டதில்லை. நீங்கள் செயல் திட்டம் தயாரித்து அதை செயல்படுத்த பல்வேறு முயற்சி எடுத்தீர்கள். உங்கள் செயல் திட்டம் தோல்வி அடைந்தது, இருப்பினும் முயற்சியை கை விடாது தொடர்ந்து போராடி வருகிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் கட்சியில் இணைய விரும்புகிறேன். யாரை தொடர்பு கொள்வது?
இருபதுதடவைபேச்சுவார்த்தைநடத்தீனிர்
கள்சரி ஏழு நாடாலுமன்றம்,பத்துசட்டமன்ற
இடம் பக்காத்தான்,டிஎபிபோட்டிஇட்ட
இடங்களைகேட்டதைசொல்லலையே,
அன்வார்பேச்சுவார்தையிலிருந்துவிலகிக்கொண்டார்,உலகிலேயே22நாள்உண்னா
விருதம்இருந்தவர்என்றபேரும்,புகழும்
உங்களையேசேரும்,உங்களைவிட
திருஉதயகுமார்சிறந்தவர்இருமுறை
சிறைதண்டனைபெற்றவர்,பீத்திக்கொள்ளா
தவர்!
Mr.ஜி.மோகன்! நல்ல கருத்து. ஹிந்டராப் என்றால் உதயகுமார் மட்டுமே உயர்ந்து நிற்கிறார். அவர்தான் ஞாபகத்திற்கே வருகிறார். ஆக. வேதமூர்த்தி, உதயாவை அரவணைத்துக் கொண்டு பக்கத்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது.
இங்கு திரு உதயகுமார்தான் வர வேண்டும் என விரும்புபவர்கள் நேரடியாக அவரை சந்தித்துதான் பாருங்களேன்… சந்தித்து உங்கள் கருத்துகளை இங்கே எழுதுங்கள்…
உதய குமார் இல்லாத HINDRAF , இன்னும் ஒரு ம இ கா ! மாலுமி இல்லாத கப்பல் , தூர நோக்கு இல்லாத பயணம் , எந்த இலக்கையும் அடையாது ! குறைந்தது உங்கள் அண்ணணையாவது HINDRAF தலைவராக அறிவியுங்கள் ! PAKATAN மகாதீரை அறிவித்தது போல ….
திரு. முனியாண்டி அவர்களே உங்கள் கருத்தை வரவேற்கிறேன் இருப்பினும். இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு பிரபாகரன் போல் நமக்கு மலேசியா தமிழர்களுக்கு போராடிய தமிழன். ஒரு திரு. உதயகுமாரை ஒரு முறை சந்தித்தேன் அப்போது அவரின் பேச்சில் நமது சமுதாயத்தை நோக்கியே இருந்தது. அது அனல் பறக்கும் பேச்சு. இப்போ மறுபடியும் அவர் தனது வக்கீல் தொழில் செய்கிறார் என்று நினைக்கிறன்…. அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. உண்மையாக நமக்காக போராடினர் அதில் எவ்வித ஒரு துளி சந்தேகமும் இல்லை. சிறையில் இருந்த பொழுது இனிப்பு நோய் வியதினால் அதிகம் சிரமம் பட்டார். கடந்த தேர்தலில் கிள்ளான் அண்டலஸ் தொகுதியில் நின்று தோல்வி அடைந்தார். என்னை கேட்டால் அது ஒரு வெற்றி என்றுதான் சொல்வேன். வரும் தேர்தலில் மறுபடியும் போட்டி இட வேண்டும் என்பது என் ஆவல். அவரின் பெருமைகளை பற்றி நிறைய எழுத வேண்டும் எனறு நினைக்கிறன். அது நமக்காக மலேசியா தமிழ் சமுதாயத்திற்கு போராடிய தமிழன் என்ற முறையில்.