பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பும் சந்தித்துப் பேசியதை ஒரு பெரிய சாதனை என்று சில தரப்புகள் வருணித்துள்ளன.
ஆளும் கட்சி அரசியல்வாதிகள், அவர்களின் சந்திப்பு 1எம்டிபி தொடர்பில் நஜிப்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பதைக் காண்பிப்பதாகக் கூறிக்கொண்டனர்.
ஆனால், டாக்டர் மகாதிர் முகம்மட், பிரதமர் மேற்கொண்டது ஒரு “பிரச்சார வருகை” என்றும் அதைக் கண்டு மக்கள், பெல்டா குடியிருப்பாளர்கள் உள்பட, ஏமாந்து விட மாட்டார்கள் என்றார்.
“அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுப்படுத்த, மலேசியா அங்கு மக்கள் பணத்தை- இபிஎப் பணத்தை முதலீடு செய்வது பற்றி மட்டும்தான் பேசப்பட்டது. எல்லாம் நஜிப்புக்கு ஆதரவு திரட்டத்தான்”, என்றாரவர்.
அது நஜிப்புக்கு ஒரு வெற்றி என்பதையோ அதன்மூலமாக நஜிப்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று நிரூபணமாகி இருப்பதாகவோ பெல்டா குடியிருப்பாளர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மகாதிர் இன்று காலை மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு கூறினார்.
மகாதிர் இப்போது, ஆளும் கட்சியின் வாக்கு- வங்கிகளாகத் திகழும் பெல்டா பகுதிகளில் மலாய் வாக்குகளை பக்கத்தான் ஹரபான் பக்கம் திருப்புவதற்குக் கடும் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
பெல்டா மக்களை விட ஓரளவு கல்வி அதிகம் பெற்றுள்ள எங்களுக்கே நீ அல்வா கொடுத்து விட்டாய். நஜிப் கொடுக்கப் போகும் அல்வாவை எந்த மாவை கொண்டு பிசைய வேண்டும் என உம்மிடம் பாடம் கற்ற அவருக்கு தெரியாதா என்ன.
இன்றைய நிலையில் இஸ்லாமிய உலகம் டிரம்ப்பை மனிதனாகக் கூட மதிக்கவில்லை. அதே போல நமது ஃபெல்டா மக்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் யார் ஏமாறுவார்? நஜிபா? டிரம்ப்பா? ஃபெல்டா மக்களா? மகாதீரா?