14வது பொதுத் தேர்தல் அந்த நாளில் நடக்கலாம் இந்த நாளில் நடக்கலாம் என்று பல்வேறு தேதிகள் குறிப்பிடப்பட்டாலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அது குறித்து சிறு அறிகுறிகூட காட்டவில்லை.
மூன்று- நாள் அமெரிக்க வருகையின் முடிவில் செய்தியாளர் ஒருவர் நஜிப்பை அணுகி பொதுத் தேர்தல் எப்போது என்று கேட்டார். நஜிப் சிரித்துக்கொண்டே “பொறுத்திருங்கள்” என்றார்.
“டத்தோ (ஸ்ரீ) இன்னும் ஓர் ஆண்டுக்கும் குறைவாகத்தான் உள்ளது”, என்று செய்தியாளர் கூறினார்.
அதற்கு நஜிப், “ஓராண்டு என்பது (அரசியலில்) நீண்ட காலம்”, எனப் பதிலளித்தார்.
நஜிப் தலைவராகவுள்ள பிஎன் கூட்டணியின் ஆட்சி செய்யும் அதிகாரம் 2018 ஜூன் மாதம் முடிவுக்கு வரும். அதற்கிடையில் பொதுத் தேர்தலை நடத்தியாக வேண்டும்.
-பெர்னாமா
எப்போது பொதுத்தேர்தல் என்பதை நஜிப் சொல்ல மாட்டார். எனக்கு தெரியும் . யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். இன்னும் 300 நாட்களில் அதாவது, 720 மணி நேரத்திற்குள், அதாவது இன்னும் பத்தே மாதத்திற்குள் நம் நாட்டின் பொதுத்தேர்தல் நடைபெற்றுவிடும். கொஞ்சம் கண்ணை மூடுங்கள், நேரம், காலம் ராக்கெட் வேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றன.
மூச்சுவிட மறந்தால் நாட்டுக்கும் நமக்கும் நன்மையே !
10-03-2018