நம்பிக்கை மோசடி செய்தார்கள் என்று கூறி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீதும் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடிமீதும் கைருடின் அபு ஹசான் வழக்கு தொடுத்துள்ளார்.
அவ்விருவரும் நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்கில் இருந்த யுஎஸ்$681 மில்லியன் குறித்து மக்களிடம் தவறான செய்திகளைக் கூறி வந்ததாக அம்னோ முன்னாள் உறுப்பினர் கைருடின் குற்றம் சாட்டினார்.
அப்படிச் செய்ததன்வழி அவ்விருவரும் அவர்கள் எடுத்துக்கொண்ட பதவி உறுதிமொழியை மீறி விட்டனர்.
அவர்கள் பதவி உறுதிமொழியை மீறி விட்டதாகவும் அதன் காரணமாக பதவியில் இருக்க தகுதியற்றவர்கள் என்றும் நீதிமன்றம் அறிவிக்கக் கோரி கைருடின் மனுச் செய்து கொண்டுள்ளார்.
நஜிப்பின் வங்கிக் கணக்கில் இருந்த ரிம2.6 பில்லியன், சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த நன்கொடை என்று கூறப்பட்டது. அதைச் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலியும் உறுதிப்படுத்தினார்.
ஆனால், நஜிப்பின் அரசியல் எதிரிகள் அதை ஏற்கவில்லை. அது 1எம்டிபி பணம் என்கிறார்கள்.
சட்டத்துறைத் தலைவர் அப்பாண்டி, சுப்பாண்டியெல்லாம் நஜிப்பின் சுட்டுவிரல் அசைவுக்கேற்ப நடனமாடுபவர்கள். யார் குட்டிக்கரணம் போட்டாலும் எதுவும் நடவாது ! வருகிற தேர்தலில் இந்த நரியை தூக்காவிடில் பின் சிவ சிவா என்று போகவேண்டியதுதான் !
பணம் சவுதியில் இருந்து வந்ததோ அல்லது மோடியிடம் இருந்து வந்ததோ – அதுபற்றி கேள்வி இல்லை , ஒரு நாட்டு பிராமருக்கு வெளியாட்கள் வெளி நாட்டிலிருந்து எதற்கு இவ்வளவு பெரிய தொகை சொந்த வங்கி கணக்குக்கு அனுப்பவேண்டும் ? நன்கொடை என்றால் UMNO பேருக்கு அனுப்பவேண்டியது தானே ?? சுண்டெலி – சிக்கிக்கொண்ட பிறகு , நான் திருட வரவில்லை – சாப்பிடத்தான் வந்தேன் என்று கதை சொன்னதாம் !!