கோலாலம்பூர், டத்தோ கெராமாட்டிலுள்ள ஒரு சமயப் பள்ளியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீயில் 24 பேர் மாண்டனர்.
இறந்தவர்களில் 22 பேர் மாணவர்கள். மற்ற இருவரும் பள்ளியின் வார்டன்கள் என்று மாநகர் தீ மற்றும் மீட்பு சேவைகள் இலாகாவின் தகவல் கூறுகிறது.
மேலும், காயமடைந்த 11 பேர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகின்றனர்.
அச்சமயப்பள்ளியின் இரண்டாவது மாடியில் காலை மணி 5.10 அளவில் தீ பற்றியதாக நம்பப்படுகிறது.
சம்பவம் நடந்த இடத்திற்கு 36 பேர் அடங்கிய தீயணைப்பு படையினர் உடனடியாக அனுப்பப்பட்டனர். சுமார் காலை மணி 6.15 அளவில் தீ அணைக்கப்பட்டது.
தீ தொடங்கியதாக கருத்தப்படும் இரண்டாவது மாடி முற்றிலும் எரிந்து விட்டது. தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இறைவனடி சேர்ந்த அனைத்து உடன்பிறப்புகளின் ஆத்மா சாந்தி பெற இறைவனை வணங்குவோம் . மறுமுனையில் இந்த சமய பள்ளிக்கு கட்டட அனுமதியும் , தீயணைப்பு கட்டட பராமரிப்பு அனுமதியும் இல்லை என கூறப்படுகிறது . இவை உண்மையாக இருப்பின் இந்த பள்ளி நடத்துவதற்கு அனுமதி அளித்தது யார் ? அனுமதியின்றி இந்த பள்ளியினை நடுத்துவதற்கு துணிந்த இந்த பள்ளியின் நிர்வாகத்தை நீதிமுன் நிறுத்தி தண்டனை பெறவேண்டும் . தன் அன்புச்செல்வங்களை இழந்த பெற்றோர்கள் / காவல்துறையினர் தவறு இழைத்தவர்கள்மீது ஒளிவு மறைவுயின்றி எதனையும் மூடி மறைக்காமல் நேர்மையான தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும் . மலேஷியா போலே ( Malaysia Boleh ) என்ற சுலோகத்தை தவறாக பயன்படுத்தாமல் , நேர்மையான வழியில் எதனையும் வழிநடத்தி நாடும் , மக்களும் நால்வழி காண வழிவகுப்போம் . நன்றி .
ஐயா T.Sivalingam@Siva
“நன்கொடை” மன்னிக்கவும் லஞ்ச ஒழிப்பு துறை மொழியில் கூறவேண்டுமானால் “கையூட்டு” படு ஜோராக நடப்பில் இருக்கும்போது (உதாரணம் இந்நாட்டின் சமீபத்திய லஞ்ச ஒழிப்பு துறையின் கையூட்டு கைதுகள்)
இவை உண்மையாக இருப்பின் இந்த பள்ளி நடத்துவதற்கு அனுமதி அளித்தது யார் ?
என்று கேள்வி எழுப்புவது நியாயமா ?