மக்களின் பொருளாதாரப் பிரச்னைகளில் கவனம் வைப்பீர்: ஹரபானுக்கு அன்வார் அறிவுறுத்து

anwarபிகேஆர்   நடப்பில்  தலைவர்   அன்வார்   இப்ராகிம்,  எதிர்க்கட்சிக்  கூட்டணி  மக்களின்  பொருளாதாரப்  பிரச்னைகளைக்  களைவதில்   கவனம்    செலுத்த   வேண்டும்   என்று    வலியுறுத்தியுள்ளார்.

வாழ்க்கைச்  செலவு  அதிகரிப்பு,  எரிபொருள்   விலை  உயர்வு,  ஜிஎஸ்டி  போன்றவற்றால்   மலேசியர்கள்   அழுத்தத்தை   எதிர்நோக்குவது   குறித்து   அன்வார்  கவலை   தெரிவித்தார்.

“அதன்   விளைவாக,    கடுமையாக   உழைக்கும்   சாதாரண  மக்கள்    சொல்லொண்ணா  இன்னல்களை   அனுபவிக்கிறார்கள்.

“எல்லாம்  தெரிந்தும்  அரசாங்கமும்   உயர்   அதிகாரிகளும்   அதனால்   மக்கள்   பாதிக்கப்படவில்லை  என்பதுபோலப்  பேசி   வருகிறார்கள்”,  என  அன்வார்   அவரின்   வழக்குரைஞர்   மூலமாக   வெளியிட்ட   அறிக்கை  ஒன்றில்    கூறினார்.

ஐந்தாண்டுச்  சிறைத்தண்டனை   அனுபவித்து வரும்   அன்வார்,   மக்களின்  உண்மை  நிலவரம்   புறக்கணிக்கப்படுவதாகக்   குறிப்பிட்டார்.

எனவே,  பக்கத்தான்   ஹரபான்   ஆளும்  கூட்டணியின்  “நிர்வாக  முறைகேடுகளையும்   ஊழலையும் ”  அம்பலப்படுத்துவது   முக்கியம்    என்றார்.