அமெரிக்காவில் இபிஎப் முதலீடு: நஜிப் அவரது அமைச்சின் விதிகளை அவரே மீறிவிட்டார்- ரபிசி

rafiziபிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்,  ஊழியர்     சேம    நிதி (இபிஎப்)     அமெரிக்காவில்   அதன்  முதலீட்டை   அதிகரிக்கும்   என்று  அறிவித்ததன்வழி  அவரது   அமைச்சின்  விதியை   அவரே  மீறிவிட்டார்   என  பிகேஆர்   உதவித்   தலைவர்   ரபிசி   ரம்லி   கூறுகிறார்.

“அவர் (நஜிப்)  அப்படி   அறிவித்தபோது   அது,    இபிஎப்-இன்  வெளிமுதலீடு  அதன்  மொத்த  முதலீட்டில்  30 விழுக்காட்டைத்   தாண்டக்கூடாது  என்ற   நிதி  அமைச்சின்  விதிகளை  மீறுவதை   அவர்   உணரவில்லை”,  என்று  ரபிசி   இன்று   ஓர்    அறிக்கையில்   கூறினார்.

இபிஎப்  தலைமைச்  செயல்  அதிகாரி   ஷாரில்  ரிட்ஸா   ரிட்சுவான்   2017  பிப்ரவரியில்   ஒரு   நேர்காணலில்   இபிஎப்-இன்  வெளிமுதலீடு  30விழுக்காட்டை  கிட்டத்தட்ட   நெருங்கி  விட்டதாக   தெரிவித்திருந்தார்    என்றாரவர்.

இபிஎப்  ஏற்கனவே  பலமுறை,   அதன்  முதலீட்டுச்  சொத்தில்  29  விழுக்காட்டை  வெளிநாடுகளில்   முதலீடு   செய்திருப்பதாக  அறிவித்துள்ளதையும்    அவர்   சுட்டிக்காட்டினார்.

“எனவே,  நிதி  அமைச்சர்  என்ற  முறையில்   நஜிப்  அவரது  அமைச்சே  விதித்துள்ள   விதிகளுக்கு   எதிராக   இபிஎப்   அமெரிக்காவில்   முதலீடுகளை   அதிகரிக்கும்   என்று   அறிவித்தது   எவ்வளவு  மடத்தனமானது  என்பதைச்  சொல்ல  வேண்டியதில்லை”,  என  ரபிசி   கூறினார்.