இனி, பேச்சுகள் இல்லை: ஹரபான் முடிவு இறுதியானது என்கிறார் நூருல்

nurulபக்கத்தான்   ஹரபான்   தலைமைத்துவ  மன்றம்    எதிர்வரும்   பொதுத்   தேர்தலில்   பாஸுடன்    ஒத்துழைப்பதில்லை    என்று  முடிவு   செய்து   ஒரு   மாதமாகப்  போகிறது.

இருந்தாலும்,  இன்னும்கூட  பாஸுடன்  ஒத்துழைக்க  வாய்ப்பு  இருப்பதாக  நம்பும்  சிலர்   பிகேஆரில்   இருக்கவே   செய்கிறார்கள்.

ஆனால்,  பிகேஆர்   உதவித்   தலைவர்   நூருல்   இஸ்ஸாவைப்  பொருத்தவரை   ஹரபான்  முடிவுதான்   இறுதியானது. அதை   பிகேஆர்  தலைவர்    டாக்டர்   வான்  அசிசா   வான்  இஸ்மாயில்    ஏற்கனவே    தெளிவுபடுத்தி   விட்டார்   என்றாரவர்.

“ஹரபான்   முடிவை   அறிவித்தவுடனேயே  பாஸுடன்  இனி   பேச்சு   நடத்தப்படாது   என்றும்  பாஸ்  இல்லாமலேயே)  இனி,  ஆக   வேண்டியதைச்  செய்வோம்   என்றும்   அவர்  (வான்  அசிசா)    கூறினார்”,  என  நூருல்  மலேசியாகினியிடம்    நேற்று    கூறினார்.

அதற்காக   உறவுகள்  முற்றாக  துண்டித்துக்கொள்ளப்படும்   என்பதல்ல    என்று  கூறிய   அவர்,    சமூக  ரீயியில்    சந்திப்பதில்  தவறில்லை   என்றார்.  எடுத்துக்காட்டுக்கு,   நோயுற்றிருக்கும்   ஒரு   தலைவரைச்   சென்று   பார்க்கலாம்,  பேசலாம்.