கெடாவின் வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் (ஆடிபி) கடல் பெருக்கின்போதும் பலத்த மழையின்போதும் ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.
எடுத்துக்காட்டுக்கு, 2015இல் சுங்கை மூடாவில் ரிம1.4 பில்லியன் செலவில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தால் கோலா மூடா மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளப் பிரச்னை ஏற்படுவது தடுக்கப்பட்டது என கெடா மந்திரி புசார் அஹ்மட் பாஷா முகம்மட் ஹனிபா கூறினார்.
“இப்போது கோலா மூடாவில் தாழ்வான பகுதிகளில் மட்டுமே வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. சுங்கை மூடா திட்டம் மட்டும் கட்டி முடிக்கப்படாதிருந்தால் மேலும் பல பகுதிகள் பாதிக்கப்பட்டிருக்கும்”, என்றார்.
“சுங்கை கெடா ஆர்டிபி திட்டம் 2019-இல் முடிவு பெறும் என வடிகால், நீர்பாசனத் துறை தெரிவித்துள்ளது”, என்றாரவர்.
அடுத்த ஆண்டு ரிம350 மில்லியன் செலவில் பெண்டாங் ஆர்டிபி திட்டம் தொடங்கும்.
“இந்த ஆர்டிபி திட்டங்கள் எல்லாம் முழுமையாக நிறைவுபெற்றதும் நீர் கடலுக்குச் செல்வதில் தடங்கல் இருக்காது, வெள்ளச் சம்பவங்களும் குறையும்”, என்றாரவர்.