முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) ஒருவர், பாஸுக்கு அதிகப்படியான சலுகைகளைக் கொடுக்கும் அம்னோ அதன் காரணமாக சாபா, சரவாக்கில் ஆதரவை இழக்கலாம் என்று எச்சரித்துள்ளார்.
அம்னோ தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக ஹுடுட் சட்டத்தை அமல்படுத்தும் பாஸின் கோரிக்கைகளுக்குப் பணிந்துபோனால் கூட்டரசு அரசாங்கம், அந்தக் கிழக்கு மலேசிய மாநிலங்களில் அதற்குள்ள நல்லெண்ணத்தையும் ஆதரவையும் இழக்கலாம் என்பதுடன் அவை கூட்டரசைவிட்டு விலகிச் செல்லக் கிளர்ச்சியில் ஈடுபடவும் கூடும் என முன்னாள் ஐஜிபி அப்துல் ரகிம் நூர் கூறினார்.
“அம்னோவின் அரசியல் அதிகார்த்தைக் காப்பதற்காக கூட்டரசு அரசாங்கம் பாஸுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுகொடுத்து வந்தால் இது நடக்கலாம்”, என்று அவர் கோட்டா கினாபாலுவில் “எதிர்காலத்தில் மலேசியா” என்ற கருத்தரங்கில் பேசியதாக . அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷியாரியா நீதிமன்ற(குற்றவியல் அதிகாரம்) சட்டத்தைத் திருத்தம் செய்ய பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கொண்டுவரும் தனி நபர் சட்டமுன்வரைவு ஹுடுட் சட்டத்தை அமல்படுத்தும் ஒரு தந்திரமாகும் என்று அப்துல் ரஹிம் கூறினார். அது முஸ்லிம்-அல்லாதாரிடம் அதிருப்தியை உண்டாக்கும் என்பதால் அது ஆபத்தானது என்றார்.
“அது, முஸ்லிம்-அல்லாத பூமிபுத்ராக்களை அதிகமாகக் கொண்டுள்ள சாபா, சரவாக்கில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும் கவலை தெரிவித்துள்ளேன்.
“அது, தொடர்ந்து மலேசியாவில் இருப்பதா வேண்டாமா என்று சாபாவையும் சரவாக்கையும் எண்ண வைத்துவிடலாம்”, என்று அப்துல் ரஹிம் கூறினார்.
நல்லது!
இவனே சொல்லி கொடுப்பான் போல