நியுஜென் கட்சி பக்கத்தான் ஹரபான் கூட்டணியில் சேரும் விருப்பத்தை . வெளியிட்டிருக்கிறது. அக்கட்சியால் பிஎன் வசமுள்ள சிறுபான்மை வாக்குகளால் வெற்றிபெற்ற தொகுதிகளில் குறைந்தது 25-ஐ பக்கத்தான் வெல்ல உதவ முடியும் என்று அது உறுதியாகக் கூறியது.
அத்துடன் ஹரபான் குறுகிய வெற்றிபெற்ற 12 இடங்களைத் தக்க வைத்துகொள்ளவும் அது உதவும் என நியுஜென் கட்சி நிர்வாகத் தலைவர் ராஜரத்தினம் ஆறுமுகம் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அக்கூட்டம், நியுஜென் கட்சியை Minorities Rights Action Party (மிரா) எனப் பெயர்மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்திருப்பதை அறிவிப்பதற்காகக் கூட்டப்பட்டிருந்தது.
கட்சி எல்லா இன சிறுபான்மை மக்களுக்காகவும் போராடும் என்று கூறியவர், அது ஹரபானுக்குச் சிறுபான்மையினரின் வாக்குகளைத் திரட்டிக் கொடுக்கவும் பாடுபடும் என்றார்.
“தாவுவாண்ட என் தலைவன்” – இரண்டாம் பாகம் எடுத்து கொண்டிருக்கிறார்கள் ! ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் மலேசியாவில் விழிப்புணர்வு தந்த HINDRAF கடைசியில் ஆசைக்கு அடிமையாகி BN க்கு நாயானதே போன தேர்தலில் ! அப்படி ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுத்து கொண்டு இருக்கிறார்கள் போலும் ! உங்களுக்கு தனி கட்சி அந்தஸ்து கொடுத்தால் , வியாபாரம் பேசுவீர்கள் துலாபாரத்துடன் ! கடைசியில் தவுக்கலையாய் பாய்ந்து சேர்வீர்கள் ! ஒரு ஆணி பிஸினஸும் வேண்டாம் !
மக்களுக்காக போராடத்தான் அரசியலுக்கு வருவதாக அனைவரும் சொல்கின்றனர் ! பின், அவர்களுக்காகவும்-அவர்களைச் சார்ந்தவர்களுக்குமே போராட்டம் நடத்துகின்றனர் ! …ம்ம்ம் எது எப்படியோ ! …வாழ்த்துகள் !
முன்பெல்லாம் தொழிலாளர் சங்கம் திறப்பதில் நமது சமூகமே முன்னுதாரணம் என்ற நல்ல பெயர் இருந்தது,காரணம் அதில் பொதுநலஉணர்வு இருந்தது. இப்போது வீட்டுக்கு வீடு,ரோட்டுக்கு ரோடு ஒரு அரசியல் கட்சி திறப்பதில் நம் சமூகம் முன்னுக்கு நிற்கிறது ! இதில் வெறும் சுயநலமே மிஞ்சுகிறது !!
சம்பாதிக்க கட்சி ஆரம்பிச்சிட்டான்கள்
அப்படியே அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால் உங்களுக்கு டத்தோ, டத்தோஸ்ரீ, துன், நிச்சயம்!