மலேசியர்களை ஒன்றுபடுத்துவதற்கு 1மலேசியா நெகாராகு பொதுக்கொள்கை ஒரு புதியத் தொடக்கமாக வரக்கூடும் என்று பிரதமர் நஜிப் கூறுகிறார்.
இப்பொதுக்கொள்கையின் கீழ் மக்கள் ஒற்றுமையின்மைக்கு ஊக்கமளிக்கும் சிந்தனைகளை வீசியெறியந்து விட்டு மலேசியா அனைவருக்கும் சொந்தமானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
1மலேசியா நெகாராகுவின் கீழ் மக்கள் தங்களுக்கிடையிலான வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, ஒன்றுபட்டு நாட்டின் சுபிட்சத்தை நிலைநிறுத்துவார்கள் என்பதோடல்லாமல் அவர்கள் நம் நாட்டைப் பற்றி பெருமைப்படுவார்கள் என்று தாம் நம்புவதாக நஜிப் அவரது நஜிப்.ரசாக்.கோம் வலத்தளத்தில் இன்று பதிவு செய்துள்ளார்.
நம்பிக்கை நாயகன் அல்தான் தூயா நஜிபு அள்ளி விட ஆரம்பித்து விட்டான் — அதையும் நம்பும் ஈனங்களுக்கு என்ன என்று சொல்ல?
ஒற்றுமையாய் இருக்கும் மக்களை, மொழி-இனம்-மதம் என்று ஊதி-ஊதி பெரிதுபடுத்தி-பிளவை உண்டாக்கி நரிவேலை செய்யும் உம்மை பாராட்ட வார்த்தைகளைத் தேடுகிறேன் ! ஏகவசன வாத்தைகள்தான் என் சிந்தனையில் அருவியாய் கொட்டுகிறது ! நஜிபு, உலகமே கைகொட்டி சிரிக்கும்போது உம்மால் எப்படி இந்த உலகை வலம்வர முடிகிறது ? அரசியல்வாதிகள் சத்தம் வரும் வாசல்களை அடைந்துவிட்டால் ஒற்றுமை தானாகவே மேலோங்கிவிடும் !…..மூடும் !
பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் வேலையை மிகவும் சிறப்பாகவே செய்கிறார் நம்பிக்கை நாயகன். ஆனால் ஒரு விசயம் மட்டும் புரியாத புதிராக உள்ளது. தேர்தல் காலத்தில் மட்டுமே நாம் மலேசியர்கள். பிறகு இதியர்,சீனர், பூமிபுத்திரா. நமக்கு பூமி புத்திரா தகுதி கிடைக்கும் வரை தே.மு. எற்பாடு செய்யும் நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளாமல் இருக்கலாமே!
இந்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இன்னும் 60 வருடங்களுக்கு
இது ஒரு 1 MALAYSIA NERAKAKU – தான்.