எந்த ஓர் அரசியல் கட்சியுடனும் பிணைப்பும் ஒப்பந்தமும் இல்லாத நிலையில், பாஸ் கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலில் அதிகமான இருக்கைகளுக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறது என்று கட்சியின் தலைமைச் செயலாளர் தாக்கியுடின் ஹசான் கூறுகிறார்.
பாஸ் கட்சி நகர்புற மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் பாஸ் அதிகமான நகர்புற பகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பு இருக்கிறது என்றாரவர்.
“நாங்கள் 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற இருக்கைகளுக்கு போட்டியிடக்கூடும், அதில் குறைந்தபட்சம் 40 இருக்கைகளைக் கைப்பற்றும் இலக்கிருக்கிறது”, என்று அவர் கோட்டாபாரு பாஸின் 50 ஆம் ஆண்டு நிகழ்சியில் செய்தியாளர்களிடம் கூறினார்.