இந்தியர்களுக்கு ஏன் வேலை கிடைப்பதில்லை, இனவாதமா?, கேட்கிறது எம்டியுசி

 

mtuc-emblemமலேசியாவில் 74 விழுக்காட்டு இந்திய இளைஞர்கள் வேலை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இந்த விபரத்தை மெடேக்கா ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

வேலை தேடிச் செல்பவர்களின் இனம் என்ன என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கிறது. இதன் அடிப்படையில், இந்நாட்டு குடிமக்களாகிய இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதாக மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி) புகார்களைப் பெற்றுள்ளது என்று அதன் தலைமைச் செயலாளர் ஜே. சோலமன் கூறுகிறார்.

இன அடிப்படையில் வேலை வாய்ப்புகள் நிர்ணயிக்கப்படுவது பற்றி அரசாங்கம் ஒருMTUC-soloman தீவிரமான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திய சோலமன், இன அடிப்படையில் வேலை வாய்ப்புகளுக்கு பாகுபாடுகள் காட்டப்படுவது உண்மை என்றால், அரசாங்கம் கோட்டா முறையை அமல்படுத்துவது அவசியமாகும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்நாட்டில் சிறுபான்மை இனத்தவர்களாக இருக்கும் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்கு கோட்டா முறை பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.