மகாதிர்: மலேசியா அமைதிப்பூங்காவாக விளங்கியது ஏமாற்றுக்காரன், திருடன் கொள்ளையன் வரும்வரையில்

dr mபக்கத்தான்    ஹரபான்   நிர்வாகத்    தலைவர்   டாக்டர்    மகாதிர்   முகம்மட்,    மலேசியர்கள்  ஒருவரை  ஒருவர்  கட்டிப்பிடித்து   அன்பைப்  பரிமாறிக்கொள்வதில்லையே    தவிர,  தங்களுக்கு   நல்வாழ்வு  கொடுத்துள்ள   நாட்டை   மிகவும்   நேசிக்கிறார்கள்   என்றார்.

மத்திய   கிழக்கில்   ஈராக்,  சீரியா,  ஏமன்   போன்ற    நாடுகளில்   ஒரே  இனத்தவர்   வாழ்ந்தாலும்   அவர்கள்  தங்களுக்குள்   அடித்துக்கொண்டு  சாகும்  நிலையுடன்  ஒப்பிட்டால்    மலேசியர்கள்  அமைதியுடனும்   நல்லிணக்கத்துடனும்   வாழ்கிறார்கள்.

“வேறுபாடுகள்   இருக்கவே   செய்கின்றன. அதற்காக   நாம்  கலவரங்களில்  ஈடுபடுவதில்லை,  ஒருவரை  மற்றவர்   கொலை  செய்ய  முயல்வதில்லை”,  என  நேற்றிரவு   டிஏபி   ஏற்பாடு   செய்திருந்த    ‘Sayangi Malaysia, Hapuskan Kleptokrasi”  கூட்டத்தில்   பேசிய   மகாதிர்   குறிப்பிட்டார்.

“முழுக்க  முழுக்க   நல்லிணக்கம்   நிலவுவதாக   சொல்ல  முடியாது.  ஆனாலும்,  யாராவது   குண்டு  வீசக்கூடும்  என்ற  பயமில்லாமல்   கூட்டம்  கூட்ட  முடிகிறது.

“….  அதற்காக   நன்றி  செலுத்த   வேண்டும்.

“நம்மிடையே  வேறுபாடுகள்   உண்டு. இருந்தாலும் எல்லாவற்றையும்  சகித்துக்கொள்கிறோம்.

“எல்லாம்  நல்லாத்தான்   இருந்தது,   ஒரு  திருடன்,  கொள்ளைக்காரன்,  ஏமாற்றுக்காரன்   வரும்வரையில்”,   என்று  மகாதிர்   கூறினார்.