பொதுப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு அதிகமான இடங்களை ஒதுக்க வேண்டுமென, இந்தியர்கள் அரசாங்கத்தைக் கேட்பதாக, மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை விரிவுரையாளர், பேராசிரியர் எம்.இராஜேந்திரன் தெரிவித்தார்.
பொதுப் பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் இருக்கும் ஒதுக்கீட்டு முறை (கோட்டா) இந்தியச் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்றார் அவர்.
“பொதுப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை, அரசாங்கம் மறுஆய்வு செய்ய விரும்புகிறோம். 100 இடங்கள் இருந்தால், இந்திய மாணவர்களுக்குச் சிறந்த 10 இடங்களை ஒதுக்க வேண்டும்,” என்றார்.
இன்று, மலாயா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்திய இளைஞர்களுக்கான ‘தேசிய உருமாற்றம்’ (TN50) நிகழ்வில் இராஜேந்திரன் இவ்வாறு பேசினார்.
இந்திய மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு, சிறந்த தேர்ச்சியை அடைகின்றனர். ஆனால், அவர்களுக்கு அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் நுழைவு கிடைப்பதில்லை, அவர்கள் விரும்பியத் துறையும் கிடைப்பதில்லை. இதனால், அவர்கள் மிகவும் பின் தங்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர், என்று அவர் விளக்கப்படுத்தினார்.
“இது வேலை இல்லாத சமுதாயத்தை உருவாக்கும், சுய மரியாதையைக் குறைக்கும். டாக்டராக வேண்டும், வக்கீலாக வேண்டும் எனும் அவர்களின் கனவுகள் சிதைக்கப்படுகின்றன,” என்றார் அவர்.
பெரும்பாலான இந்திய இளைஞர்கள் ஏழை குடும்பங்களில் இருந்து வருகிறார்கள், தனியார் பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர அவர்களுக்கு வசதியில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அட கே_ப் பயல்களா. கடந்த அறுபதாண்டுகளாக வேண்டாம் வேண்டாம் கடந்த நாலு ஆண்டுகளாக நாம் (நீங்க) என்ன சாதித்தோம். நம்ம மகளிர் பகுதியும் இளைஞர் பகுதியும் (உயிரோடு இன்னும் இருந்தால்) என்ன சாதித்தோம் என்று நாலே நாலு வரியில் சொல்லுங்க பார்ப்போம்? அறுபதாண்டுகளாக இந்த மாதிரி ஆணிகளை எல்லாம் புடுங்கச் சொல்லி கெஞ்சிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் எவனும் எந்த துரு புடிச்ச ஆனைய கூட புடுங்கக் காணோம்.
ஆண்டிகள் மடம் கட்டின மாதிரி ஒன்றாகக் கூடினோம். ஏதோ நம்ம கடமைக்கு கொஞ்சம் கூவினோம். எல்லாம் முடிந்தது. இனி அடுத்த மாநாட்டில் இதே போல கூடுவோம் கும்மியடிப்போம் கூவுவோம்.
இப்படி எல்லாம் கெஞ்சவோ பிச்சை எடுக்கவோ கூடாது. இது நம் உருமை. நம் உரிமைகளை நாம் தட்டிக்கேட்போம். மசியாவிட்டால் அதட்டிக் கேட்போம் என்று என்றைக்கு நமக்க்ய் துணிவு பிறக்கிறதோ அன்றைக்கு கூடுவோம். அதுவரை அனைவரும் சூரிய நமஸ்காரம் பண்ணி போர்வைக்குள் குடிபுகுவோம்.
ஆளும் கட்சியில் உள்ளவனும் சரி இனி ஆளப்போகும் கட்சியில் உள்ளவனும் சரி சோத்திலே கொஞ்சமாவது உப்புன்னு எதையாவது போட்டு சாப்பிடிருந்தா தமிழன் கிட்ட போய் ஓட்டுக்காக கையேந்தி பிச்சைக் கேட்காதீங்க.
UMNO அரசாங்கம் அள்ளிக்கொடுக்கவில்லை என்றாலும்
கிள்ளிக்கொடுத்ததையாவது இந்த சமூகத்தின் கண்ணில் ம.இ.கா.
தலைவர்கள் காட்டி இருந்தால்,ஒருவேலை நமது சமூதாயம் இன்று
3 சதவிகிதம் பொருளாதார முன்னேற்றத்தையாவது அடைந்திருக்கும் !
ஆனால் சுயநல என்னம் கொண்ட நமது ம.இ.கா. தலைவர்களின்
விவேகமற்ற திட்டத்தினால் இந்தியசமூகம் இன்று நிச்சயமற்ற
எதிர்காலத்தை சந்திக்கும் நிலைமைக்கு ஆலாக்கப்பட்டுவிட்டது.
ஒரு நாளிதழின் சிறப்பு பேட்டியில் துன் மஹாதிர் பிரதமமந்திரியாக
இருந்த காலத்தில் 3000 கோடி வெள்ளிவரை மானியங்களாக கொடுத்த
தாகவும்,அது என்னவானது என்பதை அப்போதைய ம.இ.கா. தேசிய
தலைவரைதான் கேட்க வேண்டும், என்று அவரே சொல்லியிருந்தார் !
அன்று இந்திய சமூதாயத்துக்காக ஒதுக்கப்பட்ட பல மில்லியன்
மதிப்பிலான டெலிகோம் பங்குகள் நமக்கு வந்து சேர்ந்ததா என்றால்
அதுதான் இல்லை! கெடா மானில அரசாங்கத்தால் வழங்கப்பட்ட
நிலத்தில்,ஏழை ம.இ.கா.உருப்பினர்களின் வியர்வை பணத்தால்
கட்டப்பட்ட ஏய்ம்ஸ் பல்கலைகழகம், கூடிய விரைவில் வேற்றுலக
வாசிகளின் கைக்கு போனாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை!
இப்படித்தானே தென்னிந்திய தொழிலாளர் நிதியை தாரைவார்தோம்!!
ஏய்ம்ஸ் பல்கலைகழகத்துக்காக மகாதிர் கொடுத்தது 150 மில்லியன்,
படாவி பிரதமராக இருந்த போது கொடுத்தது 220 மில்லியன்,
எல்லாம் சரிதான்,ஆனால் நம் ம.இ.கா. தலைவர்களுக்குத்தான் அந்த
பணத்தை நம் சமூகத்துக்காக பயன்படுத்த மனதில்லை!!!
இன்று நிலைமையே வேறு ! நஜிப் அரசாங்கம்
கிள்ளிக்கொடுத்தாலும் அதில் ஒருபடி அதிகமாகவே கொடுக்கிறது
என்பது சாமான்ய மக்களும் அறிந்த உன்மை. இதை நங்கு அறிந்து
கொண்ட நமது அரசியல்வாதிகள்,ஆளுக்கொரு அறவாரியம் திறந்து
கொண்டு இந்திய சமூதாயத்துக்கு அதன் மூலமாக நன்மைகள்
செய்யப்போவதாக சொல்லி,கிடைக்கும் அரசாங்க மானியங்களை
அதற்குள் அடக்கம் செய்கிறார்கள்! ம.இ.காவினால் நம் சமூகம்
பெற்றதைவிட இழந்ததே அதிகம்.
எதற்கும் உதவாத மர மண்டைகள், மண்ணாங்கட்டி மந்தைகள் ம.இ.கா. வினர் கேட்கவேண்டிய கேள்விகளை நீங்கள் கேட்கிறீர்களே! நன்றி.
கழுதை தேய்ந்து கட்டெறும்பு . சுவருக்கு பின்னால் மூக்கறுப்பு . புளித்து போன புளியங்கொட்டை . கேட்டு கேட்டு காதில் ரத்தமே வரும் .ஏந்திரக்கல்லில் போட்டு அரைத்தாலும் ,அறைஞ்சான் கயிறு அறுந்தாலும் ,இவன் இந்தியனுக்கு கொடுக்க போவது கையேந்து , கைய மடக்கு . வந்தேறி .
சும்மா ஜெனரல் கோர்ஸ் எல்லாம் வேண்டாம். புண்ணியமில்லை!