பக்கத்தான் ஹரபான் தலைவர் மன்றம் அக்டோபர் 2-இல் கூடும்போது, அது எதிரணிக் கூட்டணியில் சேரும் நியுஜென் கட்சியின் விருப்பம் குறித்து விவாதிக்கும் என ஹரபான் தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லா கூறினார்.
எதிரணிக் கூட்டணியில் சேர விருப்பம் கொண்டுள்ள “உண்மையான” எதிர்க்கட்சிகளை ஹரபான் வரவேற்பதாக சைபுடின் கூறினார்.
அதேவேளையில் அது சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்)த்தின் பதிவுக்காக இன்னும் காத்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“4கட்சிகள் கொண்ட அமைப்பாக பதிவுசெய்ய (ஆர்ஓஎஸ்ஸிடம்) மனு கொடுத்திருக்கிறோம். தலைவர் மன்றத்துக்குப் புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்வதில்கூட கவனமாக இருக்கிறோம்.
“ஆர்ஓஎஸ் பதிவுக்காகக் காத்திருப்பதால்தான் புதிய உறுப்புக்கட்சிகளைச் சேர்த்துக்கொள்வதற்குச் சிறிது தயக்கமாக உள்ளது”, என சைபுடின் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
பணம், பதவி வேண்டுபவர்கள் “சுப்பன் கட்சி” “குப்பன் கட்சி”யை ஆரம்பித்து, ஏதாவதொரு அணியில் இணைந்துக் கொள்ளுங்கள். அதற்கு இதுதான் தக்க சமயம் !