எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விஷயத்தில், பாரிசான் நேசனல் உச்சமன்றம் எடுக்கும் எந்தவொரு முடிவையும் தாம் மதித்து, ஏற்கவுள்ளதாக மக்கள் முற்போக்குக் கட்சியின் தேசியத் தலைவர், எம்.கேவியஸ் கூறியுள்ளார்.
பாரிசான் நேசனல் உச்சமன்றம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், பொதுத் தேர்தல் வெற்றியை உறுதி செய்யவும், கட்சி நலனைக் காக்கவுமே என அவர் சொன்னார்.
“பி.என். உச்சமன்ற முடிவு பற்றி எனக்குக் கவலை இல்லை, ஆனால், அங்கு நிறுத்தப்படும் வேட்பாளர், அனைவருக்கும் விருப்பமான ஒருவராக இருக்க வேண்டும்,” என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்குக் குறிவைத்து, கேவியஸ் தனது பரப்புரைகளை மேற்கொண்டிருந்தது தெரிந்ததே. கடந்த 13-வது பொதுத் தேர்தலில், முன்னாள் ம.இ.கா. தேசியத் தலைவர் ஜி.பழநிவேலு அத்தொகுதியில் நின்று வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து அமைச்சின் ஆலோசகருமான கேவியஸ், கேமரன் மலையில் வெற்றிபெற்று, அத்தொகுதி மக்களுக்குச் சேவையாற்ற தம்மை அனுமதிக்குமாறு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னமே, தாம் பிரதமர் நஜிப்பிடம் கேட்டுள்ளதாகவும் கூறினார்.
இருப்பினும், நேற்று நிறைவடைந்த ம.இ.கா. தேசிய மாநாட்டில், கேமரன் மலை தொகுதியை மீண்டும் ம.இ.கா.-விற்கே கொடுக்குமாறு, அதன் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் நஜிப்பைக் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.
11-வது பொதுத் தேர்தலில் இருந்து, ம.இ.கா. அத்தொகுதியில் போட்டியிட்டு வருகிறது.
கடந்த பொதுத் தேர்தலில், கேவியஸ் பேராக், தெலுக் இந்தான், பாசீர் பெடாமார் சட்டமன்றத்தில் போட்டியிட்டு, ஜசெக-வின் தேரென்ஸ் நாயுடுவிடம் 13,037 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.
இரண்டு வருஷத்துக்கு முன்னமேயே சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். கேவிஎஸ்ஸிடம் சில சில்லறைகளை கொடுத்து கேமரன் மலையிலே போய் வீசச் சொன்னது அல்தான்துயா நஜிப். கேவிஎஸ் கேமரன் மலையில் வேலை செய்வதை கண்டு பொறுக்காத ம.இ.கா. ஆ..ஊ…என சத்தம் போடும். இதை சாக்காக வைத்து ம.இ.கா., கேவிஎஸ், இந்த இரண்டு அரை வேக்காடுகளையும் அழைத்து, ‘இதோ பாருங்க, போன தேர்தல்ல வெறும் கொஞ்ச வோட்டுல தான் இந்த தொகுதியை நாம ஜெயித்தோம். இப்போ ரெண்டு பேரும் சண்டை போட்டுக்குறீங்க. உனக்கு கொடுத்தா, அவன் அடி வேலை செய்வான். அவனுக்கு கொடுத்தா நீ அடி வேலை செய்வே. அதனாலே ரெண்டு பேருக்குமே அந்த சீட் இல்ல. அம்னோவுக்கு விட்டு கொடுங்க’. இதுதான் நடக்கப் போவுது. பொறுத்திருந்து பாருங்கள்.
singam அவர்களே! அரசியல் சாணக்கியன் அய்யா நீங்கள் !!
நாளுக்கொரு வேஷம்!
கட்டின பொண்டாட்டி கூட படுக்கணும்னாலும் பிரதமர் சொல்லணும்.
அப்படி வாங்க வழிக்கு! ஏதாவது பதவி கொடுப்பாங்க, அதை வச்சி பிழைச்சிக்கிங்க!
தானை தலைவன் தேர்தலில் தோத்தான் ! அதோடு அரசியலை விட்டு விலகி நியமன பதவியில் கோடி கணக்கில் சம்பாதித்து கொண்டு ! கூத்திகளோடு கும்மாளம் போட்டு கொண்டு என்ஜோய் பண்ணி கொண்டு இல்லையா !! அவன் மானஸ்தன் !! நீயெல்லாம் கொடுத்த தொகுதியையும் தர்க்ககே தெரியாமல் தோத்து போனவன் !! உனக்கு எதற்கையா ம .இ .கா . காரனோடு தகராறு !! அவன் நாலு காசு சம்பாதிச்சுட்டு போகட்டுமே !! அவனும் நம்ம சாதிக்காரன் தானே !! பிரதமரின் காலில் விழுந்து இன்னும் ஓரி ரூ நியமன பதவி கிடைக்கிற வழியை பாரும் ஐயா !! பிரதமரின் அடி வருடி யாக இருந்து கொண்டு நாலு காசு பார்த்து குட்டியோடும் ! புட்டி யோடும் என்ஜோய் பன்னிட்டு இரும் ஐயா கவியரசு !!
ஐயா , கேவியசு பரிசன் உச்ச மன்றம் என்ற ஒன்று இருப்பது
இப்பத்தான் நினைவுக்கு வந்ததா ????
s .maniam அவர்களே !நீங்கள் சொல்லும் சமாச்சாரம் கேட்க எனக்கே மனசெல்லாம் ஒரு மாதிரியாக மாறுகிறது !! இந்த அரசியல்வாதிகளின் உலகுக்கு செல்ல ஒரு மார்க்கம் சொல்ல வேண்டுகிறேன். நானும் சாதாரண மனிதன் தானே!!!