இன அரசியல் தோன்றியதைத் தெரிந்துகொள்ள வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்கிறார் அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா.
இன அரசியல் உருவானதற்குக் காரணமே டிஏபிதான் என்கிறார் அவர். அக்கட்சி தோற்றுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன அரசியலும் தோன்றியது.
“டிஏபி தோன்றுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே அம்னோ உருவாகிவிட்டது…..அப்போதெல்லாம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் நிலவியது.
“சிங்கப்பூர் பிரிந்து சென்றதும் பிஏபி-இலிருந்து உருவானது . டிஏபி தேர்தலில் போட்டியிடத் தொடங்கியதிலிருந்து பல்வேறு இன விவகாரங்களை எழுப்பி அரசியலாக்கியது”, என்றவர் சொன்னதாக அம்னோ ஆன்லைன் கூறியது.
உங்க வரலாறு அப்படித்தான் சொல்லும்! எங்க வரலாறு வேறு மாதிரி சொல்லும்! விட்டுத் தள்ளுங்க!
இன அரசியலுக்கு காரணம் -கையால் ஆகாதனம்.. இனத்தை வைத்து யார் அரசியல் பண்ணியது? தாங்களே எல்லாவற்றையும் அனுபவிக்கவேண்டும் என்று யார் செயல் பட்டது? உண்மைக்கு எங்கே மதிப்பு? கட்சிகளை இனவாரியாக்கியது யார்?
சுதந்திரத்திற்கும் முன் மலேசியா , சுதந்திரத்திற்கு பின் மலேசியா வரலாற்றை திரும்பி பாருங்கள் விடை கிடைக்கும்.
சுதந்திரத்தின் உண்மை நிலை அறிந்து பேசுங்கள். உண்மையான சுதந்திரம் அணைத்து மலேசியா மக்களுக்கு கிடைக்கிறதா என்று.
நஜிப்பின் சமீபத்திய அமெரிக்க பயணம் தொடர்பாக நான் கூறிய கருத்தில் சிறிது மாற்றம் செய்து இப்படி கூறினால் உங்களுக்கும் பொருந்தும்.
அன்று டிஏபி தவறுதலாக ==== உண்டது என்பதற்காக
அன்று முதல் இன்றுவரை அம்னோவாகிய நாங்களும் ==== உண்கிறோம் என்று கூறுவது மடத்தனத்திலும் மடத்தனம்.