14-வது பொதுத் தேர்தல் – பஹாங் மாநிலத்தில் போட்டியிட, பி.எஸ்.எம். சார்பில் 2 வேட்பாளர்கள் தயார்

Slide1எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) சார்பில், பஹாங் மாநிலத்தில் இரண்டு வேட்பாளர்கள் களமிறங்கத் தயாராகவுள்ளனர்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் சுரேஸ் குமார் பாலசுப்ரமணியம் மற்றும் ஜெலாய் சட்டமன்றத்தில் மாட் நோர் அயாட் எனும் பூர்வக்குடியைச் சார்ந்த ஒருவரும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடுதளுவிய நிலையில், பி.எஸ்.எம். மேற்கொண்டுவரும் ’14-வது பொதுத் தேர்தலை நோக்கி பி.எஸ்.எம்.’ எனும் பிரச்சார இயக்கத்தில், வேட்பாளர்கள் அறிமுகமும் நடந்தேறியது.

கடந்த 14 ஆண்டுகளாக, கேமரன் மலை வட்டார மக்களுக்குச் சேவையாற்றி வருவதோடு, பல போராட்டங்களையும் பி.எஸ்.எம். சார்பில், தான் முன்நின்று நடத்தி வருவதாக சுரேஸ் கூறினார்.

மேலும், “இதுவரை எந்தவொரு பதவியும், அரசாங்க நிதியும் இல்லாமல்; மக்களின் பங்களிப்பையும் Slide2ஆதரவையும் மட்டுமே நம்பி, நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்றும் அவர் கூறினார்.

எனவே, இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதன் வழி, மக்கள் இயக்கம் மற்றும் சமூக அமைப்பு முறையை, பி.எஸ்.எம். மேலும் ஒருபடி முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“ஆற்றல், துணிச்சல் மற்றும் கொள்கைபிடிப்புடன், மக்கள் உணர்வைப் புரிந்து செயல்படும் பி.எஸ்.எம்.-ன் குரல் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் ஒலிக்க வேண்டும், அதற்கு மக்கள் எங்களைத் தேர்தெடுக்க வேண்டும்,” எனவும் அவர் சொன்னார்.

ஜெலாய் சட்டமன்றத்தில் போட்டியிடவிருக்கும் மாட் நோர், பூர்வக்குடி மக்கள் சார்பில், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தாம் பணியாற்றவுள்ளதாகக் கூறினார்.

main CH“நாங்கள் கேமரன் மலை வட்டாரத்தில் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறோம்.  கேமரன் மலை மற்றும் பூர்வக்குடி மக்களிடையே எங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இருப்பினும், நாங்கள் இன்னும் அதிகமாக வேலை செய்ய வேண்டியுள்ளது,” என மாட் நோர் தெரிவித்தார்.

“வெற்றி பெறுவது சுலபமான காரியமல்ல, ஆனால், அதற்கான முயற்சியில் சுரேசுடன் இணைந்து முயற்சிப்பேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.

கேமரன் மலையில் வெற்றி பெற்றால், இயற்கை வளம், சுற்றுச் சூழல், விவசாயம், சுற்றுலாத் துறை ஆகியவற்றைப் பேணி பாதுகாப்பதோடு, மக்கள் எதிர்நோக்கும் சாலை நெரிசல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க ஆவன செய்வோம் எனவும் அவர்கள் இருவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.