ஜோகூரில் முஸ்லிம்களுக்கு- மட்டும் என்ற கொள்கையுடன் செயல்படும் சலவை நிலையம் அதன் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டர் பணித்துள்ளார்.
“இந்த அபத்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஜோகூர்.
பங்சா ஜோகூருக்கு உரியது, எல்லா இனத்தவருக்கும் சமயத்தவருக்கும் சொந்தமானது, முற்போக்கான, நவீனமான, மிதவாதமான மாநிலம்.
“இது ஒன்றும் தாலிபான் மாநிலம் அல்ல. இச்செயலில் தீவிரவாதம் தொனிக்கிறது. ஜோகூரில் இஸ்லாத்துக்குத் தலைவர் என்ற முறையில் கூறுகிறேன், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்”, என கோகூர் ஆட்சியாளர் கூறியதாக த ஸ்டார் தெரிவித்தது.
இவ்விவகாரத்தை விசாரிக்குமாறு மாநில இஸ்லாமிய சமய விவகாரக் குழு, சமய மன்றம், மாவட்ட மன்றம் ஆகியவற்றுக்கு சுல்தான் உத்தரவிட்டுள்ளார்.
BANGSA JOHOR-ருக்காக குரல் கொடுத்துள்ளீர்கள்
சபாஷ் ! பாராட்டுக்கள் !
NEWSWEEK பத்திரிக்கையால் MALAYSIAN CROOK என்று அடைமொழியுடன் புகழபடுபவன், 1 MALAYSIA என வாய் கிழிய பேசுகிறானே தவிர இப்படிப்பட்ட விவகாரங்களில் ஊமையாக இருக்கிறானே.
சுல்தானின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. எந்த நடுக்கமோ, தயக்கமோ, பயமோ இல்லாது தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார். நீடுழி வாழ்க அரசே!
இதெல்லாம் பனிக்கட்டியின் நுனி தான். இன்னும் எவ்வளவோ இருட்டில் நடக்கிறது. இதை எல்லாம் ஆரம்பித்தவன் காக்காத்திமிர்- ஆனாலும் அவன் இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை– அவன் அப்போது ஆரம்பித்தது இனவெறி- இப்போது அது மத வெறியோடு சேர்ந்து பூதாகரமாகிவிட்டது- இது என்றுமே மாற போவதில்லை– காரணம் இந்த நாட்டின் கல்விக்கொள்கை. தினசரி இன /மத பேத செய்திகள்-அதை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள்- இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும் காவல்/நீதி துறை- மற்றும் புறை ஏறிப்போன ஊழல்- பிறகு எப்படி ?
பெரியவங்கதான் சிறியவங்களுக்கு நல் வழி காட்டிட வேண்டும்.
ஜோகூர் தலிபான் மாநிலமும் அல்ல,அதுபோல் இது ஒரு முஸ்லீம் நாடும் அல்ல! மலாய்காரர்களின்ஆதரவை பெற இது ஒரு முஸ்லீம் நாடு போன்ற மாயையை உருவாக்கி விட்டான்.அது இன்றும் தொடர்கதையாகிறது !
இவரை போன்று மற்ற மாநில சுல்தான்கள் இருக்க வேண்டும் என்பதே நமது ஆவல். நிச்சயம் அவர்களும் இவரை போன்று இருபதனால் தான் நாடு இன்றும் சுபிச்சமாக வீரநடை போடுகிறது. அங்கங்கே ஒரு சில சலசலப்பு இருந்தாலும் நாம் மற்ற நாடுகளை விட சிறப்பாக இருக்கிறோம்
‘முஸ்லிம்கள்- மட்டும்’ சலவை நிலையம் விவகாரத்தைவிட பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன. முஸ்லிம்கள்- மட்டும்’ சலவை நிலையம் அதன் உரிமையாளரின் சொந்த முடிவு. சலவை நிலையம் வியாபார முறையில் இயங்குகிறது. அவரின் சலவை நிலையம் முஸ்லிம்களுக்கு மட்டும் செயல் படுவதல் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கும் என்றால் தவறில்லையே. சலவை நிலையம் ஒன்றும் அத்தியவசியமான சேவை இல்லையே. அதன் உரிமையாளர் முன்னறிவிப்பு பலகை வைத்துள்ளரே. ஆகவே முஸ்லிம் அல்லாதவர்கள் வேறு சலவை நிலையத்தை தேடி செல்ல வேண்டியதுதானே. அதன் உரிமையாளர் முன்னறிவிப்பு பலகை வைக்காமல் முஸ்லிம் அல்லாதவர்கள் அங்கு சென்றப்பின் முஸ்லிம்கள் மட்டுமே சலவை செய்யலாம் என்று கூறி இருந்தால் அவரை குறைச்சொல்லலாம். சலவை நிலையம் உரிமையாளரின் செயலால் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை என்பது 100 % உண்மை.
இந்த நாட்டில் முஸ்லிம் அல்லாதவர்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணாத சில முப்திகள்/ அரசியல்வாதிகள்/ஆட்சியாளர்கள் சலவை நிலையம் உரிமையாளர் ஏதோ பெரிய தவறு செய்து விட்டதாக குறைச்சொல்கிறார்கள். இந்த நாட்டில் முஸ்லிம் அல்லாதவர்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள்.
1. முறையற்ற திருமணம் இரத்து (முஸ்லிம் அல்லாதவர்கள் திருமணம் பந்தத்தில் இருக்கும் தம்பதியரில் ஒருவர் இஸ்லாம் மதத்தை தழுவியதும் அவரின் முன்னைய திருமண இரத்தாம்.
2. பெற்றோரில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால், அவரின் குழந்தையின் மதமும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம் தாய் அல்லது தந்தையின் கீழ் குழந்தை வளர்ப்பில் வைக்கப்பட வேண்டும்
ஆகையால், பெற்றோரில் (தாய் அல்லது தந்தை) ஒருவரை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கையில், அவர்களின் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மத அந்தஸ்து நேரடியாக இஸ்லாமியமாக உள்ளது
பெடரல் அரசியலமைப்பின் 12 வது பிரிவு (4), 18 வயதிற்கு உட்பட்ட ஒரு நபரின் மதத்தை மாற்றுவதற்கு அவரது பாதுகாவலர் பெற்றோர் (தாய் அல்லது தந்தை) தீர்மானிக்க வேண்டும் என்பதை மாற்ற தேவை இல்லை.
3. பெற்றோருக்கு தெரியபடுத்தாமல் (திருட்டுதனமாக) 21 வயதுக்கு மேற்பட்ட இளையோர்களை மதம் மாற்றம் செய்வது.
4. இறந்த ஒருவரின் உடலை அடையாள அட்டையில் பின் என்ற வார்த்தை இருந்தாலே போது கடத்திச் சென்று அடைக்கம் செய்தல்.
முஸ்லீம் மட்டும் என்று அவரின் சலவை நிலையத்தில் விளம்பர படுத்துவது ! தவறாகவும் ! மத தீவிரவாதமும் தெரிகிறது ! இது அவரின் தனிப்பட்ட விருப்பம் ! ஆனால் நமது அரசாங்கமே பல இடங்களில் குறிப்பாக அரசாங்க அலுவலகங்களிலேயே பூமி புத்ரா ஸஹஜ என்று மற்ற இனத்தவர்களை ஒதுக்கி வைத்து நாம் ஓரம் கட்ட படுகிறோமே ! சத்து மலேஷியா !! கண் துடைப்பா !!
மலேஷியா நாட்டிற்கு இத்தகைய எண்ணம் உள்ளவர்கள்தான் தலைவர்களாக வரவேண்டும் .அவரது சொற்கள் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியது .
iraama thanneermalai
அன்று அம்னோ விதைத்த “மலேஷியா நாட்டிற்கு இத்தகைய எண்ணம் உள்ளவர்கள்தான் தலைவர்களாக வரவேண்டும்” என்ற விதை
இன்று அதன் பலனை அளிக்க தொடங்கி இருக்கிறது, அதை அம்னோ அறுவடை செய்கிறது வேறொன்றும் இல்லை.