ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்: மகாதிருக்கு அம்னோ அடிநிலை உறுப்பினர்கள் இறுதி எச்சரிக்கை

apologyவாரக்  கடைசியில்   சரவாக்கில்   ஒரு  கூட்டத்தில்   பேசியபோது   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்  குறித்தும்   அவரின்  தந்தையார்    அப்துல்   ரசாக்   பற்றியும்  கூறிய   கருத்துகளுக்காக   டாக்டர்   மகாதிர்   முகம்மட்    ஒரு  வாரத்துக்குள்  மன்னிப்பு   கேட்க   வேண்டும்   என்று   அம்னோ   அடிநிலை  உறுப்பினர்களின்   இயக்கம்   கோரிக்கை   விடுத்துள்ளது.

அவ்வாறு   செய்யவில்லை  என்றால்   அவருக்கு   எதிராக     பழித்துரைத்தார்,   கிளர்ச்சியைத்  தூண்டிவிடுகிறார்   என்று   போலீசில்   புகார்    செய்யப்படும்    என்று   அவ்வியக்கத்தின்   தலைவர்   சுல்கர்னைன்  மஹ்டார்   கூறினார்.

மகாதிர்   தம்  உரையில்   சரவாக்   அதன்  உரிமைகளை   இழந்ததற்கு   நஜிப்பும்   இரண்டாவது    பிரதமரான   அவரின்  தந்தையும்தான்  காரணம்   என்று   குறிப்பிட்டதற்கு  எதிர்வினையாக    அவ்வியக்கம்   இவ்வாறு   கூறிற்று.

மகாதிரிடம்    அவரது   குற்றச்சாட்டை   நிருபிக்க   ஆதாரங்கள்   உண்டா  என்று  சவால்   விடுத்த     சுல்கர்னைன்,   1963 மலேசிய   உடன்பாட்டின்    அடிப்படையில்   சாபா,  சரவாக்  மக்களின்   உரிமைகளை   ஆராய  ஒரு  சிறப்புக்குழுவை   அமைக்க   வேண்டும்   என்று   பரிந்துரைத்த   ஒரே   பிரதமர்   நஜிப்தான்   என்பதையும்  சுட்டிக்காட்டினார்.
“நஜிப் , சாபா,  சரவாக்கைச்  சேர்ந்தவர்கள்  11பேரை  முழு   அமைச்சர்களாகவும்  ஒன்பது  பேரைத்  துணை   அமைச்சர்களாகவும்   நியமித்துள்ளார். மகாதிர்  பிரதமராக  இருந்தபோது  இப்படி   நிகழ்ந்ததில்லை”,  என்றவர்  ஓர்   அறிக்கையில்   கூறினார்.