பேங்க் நெகரா மலேசியா, நிதிச்சேவைச் சட்டங்களைப் பின்பற்றாத 1எம்டிபி நிறுவனத்துக்கு ரிம116மில்லியன் அபராதம் விதித்துள்ளது.
இத் தகவலை வெளியிட்ட பக்கத்தான் ஹரபான் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறும் மத்திய வங்கியின் கடிதத்தையும் காட்டினார்.
1எம்டிபி ஊழல் குறித்து மறுபடியும் விசாரணை தொடங்க வேண்டும் என்று பக்கத்தான் ஹரபான் எம்பிகள் அனுப்பி வைத்த மகஜருக்குப் பதிலாக மத்திய வங்கி அக்கடித்தத்தை அனுப்பியிருந்தது.
“பேங்க் நெகரா ரிம115.8 மில்லியன் அபராதம் விதித்துள்ளது. அதன்படி சட்டமீறல் நிகழ்ந்திருப்பது உறுதியாகிறது.
“1எம்டிபி சுயேச்சையாக செயல்படும் அமைப்பல்ல. யாரோ சொல்லித்தான் அது சட்டங்களை மீறியுள்ளது என்பது தெளிவு”, என்றாரவர்.
சட்டமீறலுக்காக 1எம்டிபிமீது நிதிச் சேவைச் சட்டம் பிரிவு 234(3) (பி)-இன்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அது சரி, அதே வேளை சட்டத்தை மீறுவதற்குக் காரணமாக இருந்தவர் யாரோ அவர்மீது பிரிவு 234(5)-இன்கீழ் நடவடிக்கை எடுப்பதுவும் அவசியமாகும் என்று வான் அசிசா கூறினார்.
முரட்டு பூனை யாருக்கும் அடங்காத பூனைக்கு யார் மாணிக்கட்டுவது என்ற போரில் அதனுள் இருக்கும் இன்னொரு பூனை பக்குவமாக அவிழ்த்து விடுமோ என்ற அச்சம் இருக்கிறது. எல்லாம் சிவ மயம்..அவனுக்கே வெளிச்சம்.