ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டர் கடுமையாக எச்சரித்ததை அடுத்து, மூவாரில் முஸ்லிம்களுக்கு மட்டுமே என்று இயங்கிவந்த தானியங்கி சலவை நிலையத்தை அதன் உரிமையாளர் எல்லாருக்கும் திறந்துவிட முடிவு செய்துள்ளார்.
தன் செயலுக்கு சுல்தானிடம் நேரடியாக மன்னிப்பு தெரிவிக்கவும் அவர் விரும்புகிறார். அதற்கு அனுமதி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்.
“சுல்தானின் உத்தரவுப்படி நடந்து கொள்வேன். சுல்தானிடமும் ஜோகூர் மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”, என்றவர் கூறியதாக பிரி மலேசியா டுடே அறிவித்துள்ளது.
இது இவ்வளவு பெரிய விவகாரமாக மாறுமென்று எதிர்பார்க்கவில்லை என்றாரவர்.
இதனிடையே, சலவை நிலையத்துக்கு முன்புறத்தில் வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களுக்கு மட்டும் என்று கூறும் அறிவிப்புப் பலகை இப்போது இல்லை என்றும் அதை அதன் உரிமையாளரே அதை அகற்றிவிட்டார் என்றும் சின் சியு டெய்லி கூறிற்று.
தன்னைவிட சக்தியுள்ளவன் என்றால், சாமானியன் அவனிடம் “பம்முகிறான்” ! சக மனிதனிடம் “வீராப்பை” காண்பிக்கிறான். இறைவன் முன் “ஒரு பயலும்” உயந்தவனுமில்லை, தாழ்த்தவனுமில்லை. அனைவரும் சரி நிகர் சமமே.
இந்நிகழ்வுக்குப் பிறகும் முசுலிம் அல்லாதவர்கள் இந்த சலவை நிலையத்திற்கு சென்றால் அவர்களைவிட மானங்கெட்ட ஜென்மம் வேறு எவரும் இருக்க முடியாது.
சலவை நிலைய உரிமையாளருக்கு பக்குவப்பட்ட மனது. பாராட்டுக்கள். நம் நாட்டில் இத்தகைய மத தீவிரவாத பிற்போக்கான செயல்களுக்கு காரணமே அம்னோதான். அம்னோவின் இனவாத ஆட்சிக்கு, செல்வ செழிப்புமிக்க நம் நாடு சீரழிந்து வருகிறது.